
பிரபல இளம் நடிகை ஒருவர், பர்த்டே பார்ட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின், தன்னுடைய காரில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் பலமான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரிஷிகா சிங். இவருடைய தந்தை ராஜேந்திர பாபு சிங் பிரபல கன்னட இயக்குனர்களில் ஒருவர். அதே போல் இவருடைய சகோதரர் ஆத்தியா நடிகராக உள்ளார்.
இந்நிலையில், கன்னடத்தில் கிட்ட தட்ட 10 திற்கும் அதிகமான படங்களில் நடித்து வரும், ரிஷிகா சிங், ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் பணிகள் இல்லாததால், முடிந்தவரை கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.
மேலும் செய்திகள் : விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் வைரலான ஹாட் போட்டோ... மிச்சம் மீதியையும் வெளியிட்டதால் செம குஷியான ரசிகர்கள்!
மேலும் இவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் என்பதால், அந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று விட்டு, காரில் வீடு திருப்பி கொண்டிருந்தபோது, ரிஷிகா சிங் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பெங்களூரு அருகே மவல்லிபுரா என்னும் பகுதியில் மோதி விபத்துக்குள்ளது. இதில் காரின் முன் பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.
மேலும், கார் ஓட்டி வந்த ரிஷிகா சிங் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், பலத்த காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இன்னும் ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது. இதை அறிந்த ரிஷிகா சிங் ரசிகர்கள் விரைவில் அவர் நலம் பெற்று வர வேண்டும் என தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.