kannada actor shivaram : 6 தலைமுறை நடிகர்களுடன் நடித்த ரஜினி பட நடிகர் சிவராம் காலமானார்!!

Kanmani P   | Asianet News
Published : Dec 05, 2021, 07:42 AM ISTUpdated : Dec 05, 2021, 07:44 AM IST
kannada actor shivaram : 6 தலைமுறை நடிகர்களுடன் நடித்த ரஜினி பட நடிகர் சிவராம் காலமானார்!!

சுருக்கம்

kannada actor shivaram : தமிழில் ரஜினியின் தர்மதுரை படத்தில் நடித்திருந்த  கன்னட திரையுலகில் பிரபல பழம்பெரும் நடிகர் சிவராம் காலமானார்.

60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகன் முதல் துணைக் கதாபாத்திரம் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார் பழம்பெரும் நடிகர் சிவராம். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக அறியப்படும் இவர் கடந்த1938 இல் தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.

இவரின் முதல் திரை பயணம் துவங்கியது 1965 இல் பெரத்தா ஜீவாவுடன்  நடித்ததுதான். இதை தொடர்ந்து கன்னட மொழி படங்களான " துட்டே தொட்டப்பா ,  லக்ன பத்ரிகே" உள்ளிட்ட திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

இவர்  :நாகரஹாவு, நானோப்பா கல்லா, யஜமானா, அப்தமித்ரா மற்றும் ஹோம்பிசிலு "ஆகிய படங்களில் நடித்திருந்த சிவராம் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

தமிழில் ரஜினி நாயகனாக நடித்து ஹிட் அடித்த தர்மதுரை படத்தில் துணை நடிகராக சிவராம் நடித்துள்ளார். 
இடர்க்கிடையே இவர்  ராஷி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தனது உடன்பிறந்தவர் எஸ் ராமநாதனுடன் இணைந்து தொடங்கினார். இந்த நிறுவனம் மூலம் "கெஜ்ஜே பூஜை மற்றும் உபாசனே" உள்ளிட்ட  சில வெற்றித் திரைப்படங்களை தயாரித்தார். இவர் இறுதியாக சினேகிதா என்ற படத்தில் நடித்தார். 

 83 வயதான சிவராம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது ,மறைவு குறித்து சிவராமின் மகன் எஸ்.லட்சுமிஷ் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

ஆறு தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் சிவராமின் மறைவுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ட்விட்டரில், 'கன்னட சினிமாவின் மூத்த நடிகர் மறைந்தார் என்ற செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். அவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

அதோடு  கர்நாடக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், கன்னட திரையுலகைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறிவுக்கரசியின் பிளானை வாஷ் அவுட் பண்ணிய தர்ஷினி... முல்லைக்கு விழுந்த தர்ம அடி - எதிர்நீச்சல் தொடர்கிறது
சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!