
பிரியங்கா சில வாரங்களாக மாஸ் பிளான் போட்டு வருவதாகவே ரசிகர்கள் கருதி வருகின்றனர்.இவரை டிஸ்டர்ப் செய்யும் போட்டியாளர்களை கெட்டவர்கள் என நிரூபித்து வெளியில் அனுப்ப வேண்டும் என்கிற முழு முயற்சியில் ஈடுபடுவதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இவர் டார்கெட்டில் இருப்பது தாமைரை, ராஜு, அண்ணாச்சி தான். இவர்களுடன் அடிக்கடி மோதி வரும் பிரியங்கா. கடந்த வாரம் வெளிப்படையாகவே எதிர்ப்பை காண்பித்து வந்தார். இருந்தும் தாமரைக்கு முத்தம் கொடுப்பது. அண்ணாச்சியிடம் பேசுவது என தான் எதிராக இருப்பதை வெளிப்படுத்தாத வகையிலும் நடந்து கொண்டுள்ளார் பிரியங்கா.
இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள கமல் நேற்றைய இறுதி வார எபிசோடை தொகுத்து வழங்கினார். அப்போது ராஜுவிடம் நீங்கள் ஏன் வேலை செய்வதில்லை என கமல் கேட்க. சார் நான் பாத்ரூம் கிளீன் பன்றேன், வீடு பெருக்குறேன், ஆனால் உயரமாக இருப்பதால் பாத்திரம் மட்டும் கழுவ இயலவில்லை என கூறுகிறார்.
இதற்கு பதிலளித்த கமல் ஃபர்ஸ்ட் சேவ் ஆகிறதுனால பத்து தேய்க்க கூடாதுன்னு இல்லைங்க என ராஜுவிடம் கேட்ட கையேடு ஸ்டூல் போட்டு பாத்திரம் கழுவுங்க அப்பாவது பிரியங்காவும் தெரியுதா என் பார்ப்போம் என நக்கலாக கூறினார். இது ராஜு வேலையே செய்வதில்லை என குறி வந்த பிரியங்காவிற்கு கமல் கொடுத்துள்ள நோஸ் கட்டாகவே ராஜு ஆர்மியும் பார்வையாளர்களும் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.