
ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், வைரமுத்து பாடல் வரிகளில், சுஜாதாவின் எழுத்தில் இப்படம் வெளியானது. 1811ம் ஆண்டு ஜேன் ஆஸ்டென் எழுதிய சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி நாவலை அடிப்படையாக உருவாக்கப்பட்டது இந்த திரைப்படம். அந்தப்படத்தில் வரும் ’என்ன சொல்லப் போகிறாய்’பாடல் இன்னும் பலருக்கு ஃபேவரைட். சங்கர் மகாதேவனுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது அந்த பாடல்.
தமிழ் சினிமாவில் காதலை இவ்வளவு அழகாகவும், இவ்வளவு மென்மையாகவும் தெரிவிக்கும் கதைகளுக்கும் வாய்ப்புகள் உண்டா என எண்ண வைத்த படம் அது. பிடிக்கும், ஆனால் சேர்ந்து வாழ வழியில்லை. பிடிக்கும், ஆனால் என் கனவுகளை நோக்கி நான் நகர்ந்து சென்றிருக்கின்றேன். எனக்கு உன்னை பிடிக்கிறது. ஆனாலும் நீ என் மீது காட்டும் கரிசணம் காதல் இல்லை. அது வெறும் கரிசணம் தான் என்று ஒரு முக்கோண காதலும், புரிதலோடு பயணிக்கும் காதல் மறுபுறமும் மக்கள் மனதில் நின்று கொண்டது. இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது என்று சொன்னால் நம்பத்தான் முடியுமா.? ரசிகர்கள் கொண்டாடும் கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன்.
இந்நிலையில் அந்தத் திடைப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு 20 ஆண்டுகளுக்கு பிறகு மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், அஜித், தபு, அப்பாஸ் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.