கொழுந்து விட்டு எரியும் ஆபாசப்பட தயாரிப்பு விவகாரம்..! சிக்கிய 'காமசூத்ரா' பட நடிகை..!

Published : Jul 27, 2021, 03:12 PM ISTUpdated : Jul 27, 2021, 03:55 PM IST
கொழுந்து விட்டு எரியும் ஆபாசப்பட தயாரிப்பு விவகாரம்..! சிக்கிய 'காமசூத்ரா' பட நடிகை..!

சுருக்கம்

பாலிவுட் திரையுலகில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஆபாசப்பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அடுத்ததாக 'காமசூத்திரா' படத்தில் நடித்த ஷெர்லின் சோப்ராவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பாலிவுட் திரையுலகில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஆபாசப்பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அடுத்ததாக 'காமசூத்திரா' படத்தில் நடித்த ஷெர்லின் சோப்ராவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலக பிரபலமாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்தரா... ஆபாச படங்களை தயாரித்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்த வழக்கில்,  கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடிக்கப்பட்ட நிலையில், இவர் குறித்து அடுத்தடுத்து பல அதிர்ச்சி வெளியாகி கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சில பாலிவுட் நடிகைகள் புகார் கொடுத்துவரும் நிலையில், மற்றொரு புறம் சந்தேகம் உள்ளவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே ராஜ் குந்தாராவின் மனைவி ஷில்பா ஷெட்டி உட்பட, சில நடிகைகள், மற்றும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக சந்தேகப்படும் நபர்களை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, 'காம சூத்ரா' பட நடிகை ஷெர்லின் சோப்ராவிற்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவரை ஆபாச படம் தயாரித்ததில் தொடர்புள்ளதாக சந்தேகித்து விசாரணை செய்ய உள்ளனரா? அல்லது ஆபாச படத்தில் நடித்ததாக சந்தேகித்து விசாரணை செய்ய உள்ளாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

மேலும் ஷெர்லின் சோப்ராவை தவிர மற்ற சில கவர்ச்சி நடிகைகளும், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'காமசூத்ரா' பட நடிகரை ஷெர்லின், தமிழில் 'யுனிவர்சிட்டி' என்கிற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Movie Theater Etiquette: மூவி பார்க்க தியேட்டர் போறீங்களா? இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
Nayanthara Fitness: ஜிம், டயட் எதுவுமே இல்லையா? 41 வயதில் நயன்தாராவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?