ஆள விடுங்கடா சாமி... சினிமாவே வேண்டாமென விலகி ஓடியது ஏன்? வேட்டையாடு விளையாடு நாயகி கமலினி ஓபன் டாக்

Published : Aug 30, 2025, 12:22 PM IST
Kamalinee

சுருக்கம்

வேட்டையாடு விளையாடு படத்தின் நாயகி கமலினி முகர்ஜி, சினிமாவுக்கு முழுக்கு போட்டதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Kamalinee Mukherjee Quit Acting : நடிகை கமலினி முகர்ஜி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சமீபத்தில், ஒரு பாட்காஸ்டில், தான் சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணத்தை அவர் கூறி இருக்கிறார். அதன் படி ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'கோவிந்துடு அந்தரிவாடலே' படம் தான் சினிமாவில் இருந்து விலக முக்கிய காரணம் என கூறி இருக்கிறார். படப்பிடிப்பு அனுபவம் "அற்புதமாக" இருந்தபோதிலும், திரையில் தனது கதாபாத்திரம் இறுதியில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டது என்பதில் தனக்கு "வருத்தம்" ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சினிமாவில் இருந்து விலகியது ஏன்?

அவர் கூறியதாவது : "படக்குழுவினரிடம் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. படப்பிடிப்புக் குழுவினர் அற்புதமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளித்தனர். ஆனால் என் கதாபாத்திரம் வெளிவந்த விதம் எனக்கு உடன்பாடில்லாததாக இருந்தது. எந்த சர்ச்சையும் இல்லை, சண்டையும் இல்லை. வருத்தமாக உணர்ந்ததால் சிறிது காலம் படங்களில் இருந்து விலகினேன்" என்று அவர் கூறினார்.

படப்பிடிப்பின்போது ஒரு காட்சி சிறப்பாகத் தெரிந்தாலும், சில நேரங்களில் அது இறுதிப் பதிப்பில் அதன் தாக்கத்தை இழக்கும் என்று அவர் விளக்கினார். "சில நேரங்களில் இது உங்கள் காட்சி என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது சிறந்த விஷயமாகத் தோன்றும். ஆனால், திரையில் வரும்போது அது அப்படி இருக்காது.

பின்னர், நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, ​​நீங்கள் செய்த விதத்தில் அது வெளிவரவில்லை அல்லது அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை இயக்குநர் உணர்வார். அந்த விஷயங்கள் எங்களுக்குத் தெரியாது. நான் அனுபவித்த விதம் மிகவும் தனிப்பட்டது, அது எனக்கு வருத்தத்தை அளித்தது. அதனால்தான் தெலுங்குப் படங்களில் இருந்து விலகி, வேறு மொழிப் படங்களை முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார்.

யாரிடமும் வெறுப்பு இல்லை:

இருப்பினும், இதுகுறித்து யாரிடமும் தனக்கு வெறுப்பு இல்லை என்று கமலினி முகர்ஜி தெரிவித்தார். இவர் தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் பார்த்த முதல் நாளே பாடலில் அசத்தி இருப்பார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?