மொட்டை அடித்து நடிக்கவும் நான் தயார்....அதிரடியாக கூறும் அக்ஷரா ஹாசன்...

 
Published : Mar 10, 2017, 07:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
மொட்டை அடித்து நடிக்கவும் நான் தயார்....அதிரடியாக கூறும் அக்ஷரா ஹாசன்...

சுருக்கம்

kamalhassan daugther akshara hassan interview

கோலிவுட்டில் உள்ள பல நாயகிகள் எந்த விதமான கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிப்பார்கள், ஆனால் மொட்டை அடித்து நடிப்பார்களா...? என்றால் சந்தேகம் தான்.

கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த தன்ஷிகா கூட பாய் கட்டிங் போல் முடியை வெட்டிக்கொண்டாரே தவிர மொட்டை அடித்து நடிக்க வில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகன் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசனை சொல்லலாம், இவர் நடிக்கும் படத்தில் அந்த கதாபத்திரத்திற்காக எந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து நடிக்க முடியுமோ அந்த அளவிற்கு நடித்து கொடுப்பார்.

இவரை போலவே இவரது இரண்டாவது  மகள் அக்ஷரா ஹாசன், சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தனக்கு ஒரு கதை பிடித்து விட்டால், அந்த கதைக்காக மொட்டை அடித்து நடிப்பதற்கும் தயார் என கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய 7 வயதில் நடந்த ஒரு சம்பவத்தையும் நினைவு கூர்த்துள்ளார், அதில் ஒரு முறை தன்னுடைய தந்தை கமல்ஹாசன் மொட்டை அடித்திருந்தார். அதை பார்த்து தனக்கும் மொட்டை அடித்து கொள்ளும் ஆசை வந்ததாகவும் அதை கூறியவுடன் , தனது தந்தை அந்த ஆசையை அவருடைய கைகளாலேயே மொட்டை அடித்து நிறைவேற்றி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்
2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி