ரெண்டு ரெண்டா போகுமோ... இல்ல கூண்டோட கைலாசமோ...! போட்டியாளர்களை வச்சு செய்யும் கமல்..!

By manimegalai aFirst Published Dec 5, 2020, 4:29 PM IST
Highlights

இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் செய்வது தவறு என்பதை அறிந்தும் சில எரிச்சலூட்டும் செயல்களை செய்வதை பார்க்க முடிந்தது. தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் ஹவுஸ் மேட்ஸ் செய்த தவறுகளுக்கு இன்று பதில் சொல்ல வேண்டிய நாள். 

இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் செய்வது தவறு என்பதை அறிந்தும் சில எரிச்சலூட்டும் செயல்களை செய்வதை பார்க்க முடிந்தது. தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் ஹவுஸ் மேட்ஸ் செய்த தவறுகளுக்கு இன்று பதில் சொல்ல வேண்டிய நாள். முதல் புரோமோவிலேயே, எத்தனை முறை சொன்னாலும் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள்? என்ன செய்வது என விழிகளை உருட்டி வார்த்தைகளை விட்டார் கமல்.

இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு தெறிக்கவிட்டுள்ளார்.

இந்த புரோமோவின் ஆரபத்தில் ரசிகர்களை பார்த்து, எனக்கும் உங்களை போலவே... நிறைய கேள்விகள் மனதில் இருக்கிறது என கூறுகிறார். பின்னர் அகம் டிவி வழியே பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடிக்கும் கமல், இந்த விளையாட்டின் அடி நாதம் புரியவில்லையா என கேள்வி எழுப்பி, அனிதா மற்றும் பாலாஜியை சுற்றி காட்டினார்.

கேப்ரில்லா - சோம் ஆகியோர் சொல்லி வைத்து கொண்டு செய்தது போல் இருந்தது. ஏன் விட்டு கொடுத்தீர்கள் சோம் என்ற கேள்வியை எழுப்பிய பின், நிஷாவை பார்த்து... உங்கள் சாயலில் இன்னொரு சகோதரி இருக்கிறார்களா என கேட்கிறார். ரமேஷுக்கு நீங்கள் விட்டு கொடுக்கும் போது நிஷாவை அங்கு காணவில்லை என தெரிவிக்கிறார்.

டீம் டீம்மாக சேர்ந்துடீங்களோ.... ரெண்டு ரெண்டா போகுமோ அல்லது கூண்டோட கைலாசமோ என மக்களின் ஆதங்கத்தை நாசுக்காக நறுக் என ஹவுஸ் மேட்சுக்கு புரிய வைக்கிறார். 

தற்போது வெளியாகியுள்ள பரபரப்பான புரோமோ இதோ...

இல் இன்று.. of - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/Rd5JcxxIaM

— Vijay Television (@vijaytelevision)

click me!