Bigg Boss Promo: இதுபோல் நாமும் வாழ முடியுமா? விஜயகாந்த் பற்றி பேசி... பிக்பாஸ் மேடையில் உருகிய கமல்ஹாசன்!

Published : Dec 30, 2023, 03:06 PM IST
Bigg Boss Promo: இதுபோல் நாமும் வாழ முடியுமா? விஜயகாந்த் பற்றி பேசி... பிக்பாஸ் மேடையில் உருகிய கமல்ஹாசன்!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில், உலக நாயகன் கமல்ஹாசன்... விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார். அந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.  

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்றுடன் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 90 நாட்களை எட்டியுள்ளது. இதில் தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய துவங்கியபோது உள்ளே வந்த மாயா, பூர்ணிமா, ரவீனா, விசித்ரா, மணி ஆகியோர் உள்ளனர். அதே போல் 28-ஆவது நாளில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த தினேஷ் மற்றும் அர்ச்சனா நிலைத்து விளையாடி வரும் நிலையில், பூகம்பம் டாஸ்க் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த விஜய் வர்மாவும் விளையாடி வருகிறார்.

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், செம்ம டஃப் கொடுத்து விளையாடி வரும் நிலையில்... இன்னும் இரண்டு வாரங்களில் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளதால், நாளுக்கு நாள் போட்டிகளும் கடினமாகிக்கொண்டே செல்கிறது. அதே போல் இந்த சீஸனின் வெற்றியாளர் யார் என்பது தற்போது வரை யாராலும் யூகிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

போங்காட்டம் ஆடும் பிக்பாஸ்.! எலிமினேஷனின் நடந்த ட்விட்? முக்கிய போட்டியாளர் வெளியேற்றப்பட்டதால் அதிர்ச்சி!

இன்றைய தினம் உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் குரலாக... அகம் டிவி வழியாக பேச உள்ளார். விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து கமல் புரோமோவில் பேசியுள்ளதாவது, "என்னுடைய சோகத்தை, நம்மின் பலரது சோகத்தை...  இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்வதை, என் கடமையாக நான் நினைக்கிறன். விஜயகாந்தை பற்றி நிறைய கண்ணீர் சிந்தப்பட்டிருப்பதை விட,அவரை  நினைத்து புன்னகைப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. இதுபோல் நாமும் வாழ முடியுமா? என்பதை யோசித்தால், அவர் வாழந்த வாழ்க்கைக்கு அர்த்தமும், நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமும் வரும் என உணர்வு பொங்க பேசியுள்ளார். இந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி