KamalHaasan : தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தை தயாரித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். கடந்த 1981-ம் ஆண்டு வெளியான ராஜ பார்வை படம் மூலம் இந்நிறுவனத்தின் பயணம் தொடங்கியது.
இதையடுத்து விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், விருமாண்டி, உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் குணா, அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்சதந்திரம் போன்ற படங்களை வெளியிட்டும் உள்ளது.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் தயாராகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ளார். இதுதவிர நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் காசாளர் உயிரிழந்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “எங்கள் RKFI நிறுவனத்தில் காசாளராக 32 ஆண்டுகள் பணியாற்றிய எஸ். முரளியை இன்று இழந்துவிட்டோம். அவரது குடும்பத்திற்கும், எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. மிஸ் யூ முரளி.. நீங்கள் இவ்வளவு சீக்கிரம் விடைபெற்றிருக்க வேண்டியதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Beast movie : பீஸ்ட் படத்தின் ரிலீஸில் அதிரடி மாற்றம்... புது ரிலீஸ் தேதியுடன் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியீடு
எங்கள் RKFI நிறுவனத்தில் காசாளராக 32 ஆண்டுகள் பணியாற்றிய எஸ். முரளியை இன்று இழந்துவிட்டோம். அவரது குடும்பத்திற்கும், எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. மிஸ் யூ முரளி.. நீங்கள் இவ்வளவு சீக்கிரம் விடைபெற்றிருக்க வேண்டியதில்லை.. pic.twitter.com/SRQ0aJzsKg
— Kamal Haasan (@ikamalhaasan)