
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த எச்.வினோத், இந்த படத்தை தொடர்ந்து இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்கள் இவருக்கான மதிப்பை கூட்டியது.
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் எச்.வினோத், தன்னுடைய அடுத்த படத்தை உலக நாயகன் கமலஹாசனை வைத்து இயக்க உள்ளார். கமலஹாசனின் 233 வது படமாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு சற்று அதிகரித்துள்ளது என்றே கூறலாம். காரணம் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான 'விக்ரம்' படம் மாபெரும் ஹிட் அடித்ததோடு மட்டுமின்றி வசூலிலும் பெருத்த லாபத்தை பெற்றுக் கொடுத்தது என்பதால்.
Nanaynthara House: போயஸ் தோட்டத்தில் உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டை பார்த்திருக்கீங்களா?
KH 233- ஆவது படத்திற்கு முன்பாக கமலஹாசன், பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் 'கல்கி 2898 AD' படத்திலும், எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் எச் வினோதோடு கமலஹாசன் இணையும் 233-ஆவது படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு முன்பாக இப்படத்தின் கன் சூட்டிங் பயிற்சியை கமலஹாசன் மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ட்ரைனிங் வீடியோவிலேயே ரசிகர்களை மிரள வைத்துள்ளார் கமல்ஹாசன், இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.