என்ன...? உலக நாயகனும் சியானும் இணைந்து நடிக்கிறார்களா..?

 
Published : Jan 05, 2018, 07:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
என்ன...? உலக நாயகனும் சியானும் இணைந்து நடிக்கிறார்களா..?

சுருக்கம்

kamalahassan and vikram join the movie

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்ட நட்சத்திர கலை விழா நாளை மலேசியாவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ்த் திரையுலகமே மலேசிய கலை விழாவிற்காக பரபரத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கோலிவுட்டில் ஒரு சர்ப்ரைஸான விஷயம் நடக்க விருக்கிறது.

அது என்னவென்றால் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விக்ரமும்  கமலும் இணைந்து நடிக்கப் போவதாகப் பரவி வரும் தகவல்கள்தான்!

கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம் செல்வா. இது இவருடைய முதல் படம். இவர் உதவி இயக்குநராக இருந்து கமலிடம் நிறைய சினிமா நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர். 

இந்நிலையில் தற்போது ராஜேஷ் எம் செல்வா கமல்ஹாசனின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலுக்காக ஒரு படம் இயக்கப் போகிறார். இதில்  விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இயக்குநருக்கு இரண்டாவது படமாகும். கூடுதல் செய்தியாக விக்ரமும் கமலும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

ஒரு வேளை இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் இது எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும். ஏனெனில் விக்ரமை அடுத்த கமல் என்றே கூறுவார்கள். விக்ரமின் நடிப்பாகட்டும், ஒவ்வொரு படத்திற்கும் கெட்டப் மாறுவதாகட்டும்...  உயிரைக் கொடுத்து நடிப்பார். 

தூங்காவனம் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்ததால், இந்தப் படத்திற்கும் இவரே இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல், விக்ரம் இருவரும் வித்தியாசமான ரோல்களில் அசத்தக்கூடியவர்கள். அதனால் இந்தப் படம் குருதிப்புனல் படம் போல்  ஒரு திரில்லர் படமாக இருக்குமா அல்லது காதலா காதலா மாதிரி காமெடி படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?