
கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகைகளில் ஒருவர் நடிகை தீபிகா படுகோனே... இவர் தமிழில், நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கோச்சடையான் படத்திலும் நடித்துள்ளார். இவர் எந்த அளவிற்குப் பிரபலமோ அதே அளவிற்கு இவரைச் சுற்றும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை எனலாம்.
சமீபத்தில்தான் இவர் நடித்து முடித்துள்ள 'பத்மாவதி' திரைப்படத்தை வெளியிடக் கூடாது என குஜராத், மகாராஷ்ரா உள்ளிட்ட இடங்களில் இவரது தலைக்கு 5 லட்சம், 10 லட்சம் என விலை பேசப்பட்டது. இதனால் இவர் நடித்த 'பத்மாவதி' படத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோலிவுட் திரையுலகைச் சேர்ந்த கமலஹாசன் உள்ளிட்டபலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது, நடிகை தீபிகா படுகோனேவிற்கும், நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாகவும், இவர்களின் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் நிச்சயதார்த்தத்துக்காக இலங்கை சென்றிருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. பின்னர் இந்தத் தகவல் வெறும் வதந்தி என தீபிகாவின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
பாலிவுட் திரையுலகில் இப்படி ஒரு வதந்தி பரவக் காரணம், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது. இருவரும் இணைத்து இதுவரை 'ராம் லீலா', 'பாஜிராவ் மஸ்தானி' சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் 'பத்மாவதி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.