Vikram Official Trailer :அஸ்தமன காட்டில் வேட்டையாடும் கமல்...மிரளவைக்கும் ஆக்சன் காட்சிகளுடன் விக்ரம் ட்ரைலர்

Kanmani P   | Asianet News
Published : May 19, 2022, 03:43 PM IST
Vikram  Official Trailer :அஸ்தமன காட்டில் வேட்டையாடும் கமல்...மிரளவைக்கும் ஆக்சன் காட்சிகளுடன் விக்ரம் ட்ரைலர்

சுருக்கம்

Vikram  Official Trailer : பிரமாண்டமாக வெளியிடப்பட்ட கமலின் விக்ரம் பட ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலர் தற்போது மாஸ் வைரலாகி வருகிறது.

கைதி ஸ்டைலில் விக்ரம் மூவி :

கார்த்தியின் கைதி, விஜயின் மாஸ்டர் என இரு ஹிட் படங்களை கொடுத்த  படத்தின் வெற்றிக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் விக்ரம். உலகநாயகன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

அனிருத் இசையில் மீண்டும் ஹிட் :

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. விக்ரம் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கிரீஷ் கங்காதரன் மேற்கொண்டுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படதிலிருந்து சமீபத்தில் வெளியான பத்தல பத்தல சாங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சாதனை படைத்தது. இந்த பாடல் அனிருத்-கமல் கூட்டணியில் உருவாகியிருந்தது. ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்த போதிலும் அதிக எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் இப்பாடல் பெற்றது.  

விரைவில் வெளியாகும் விக்ரம் :

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விக்ரம் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. பட ப்ரோமோஷன்களை வேகப்படுத்தியுள்ள இந்நிறுவனம் தென்னக ரயில்களில் விக்ரம் பட போஸ்டரை வரைந்து விளம்பரப்படுத்தியது. கமலின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகும் இந்த படம் அதிக எதிரிபார்ப்புகளை உருவாக்கியுள்ளது. வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லாஞ்ச் சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் :

இதையடுத்து விக்ரம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர்  பிரான்ஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழ் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது  குறித்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தற்போது வெளியான விக்ரம் ட்ரைலர் :

இந்நிலையில் விக்ரம் படத்தின் ட்ரைலர் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கமல் கதை குரலில் முதலில் வில்லன்களான விஜய்சேதுபதி, பகத்பாசில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இதில் விஜய் சேதுபதி துப்பாக்கியுடன் மாஸ் என்ட்ரி உள்ளது. பின்னர் வேட்டைக்காரனாக வில்லன்களை வேட்டையாடும் நாயகனாக உலகநாயகன் என்ட்ரி கொடுக்கிறார். பிஜிஎம், ஆக்ஷன் என தூள் பறக்கிறது ட்ரைலர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!