தீபிகாவை பாதுகாக்க வேண்டும் !! பத்மாவதி படப் பிரச்சனையில் களம் இறங்கினார் கமல் !!!

Asianet News Tamil  
Published : Nov 21, 2017, 07:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
தீபிகாவை பாதுகாக்க வேண்டும் !! பத்மாவதி படப் பிரச்சனையில் களம் இறங்கினார் கமல் !!!

சுருக்கம்

kamal twitter for deepika padukone

பத்மாவதி  பட பிரச்சனையில் தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும் நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்..

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி திரைப்படம்  வரும் 1-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பாஜக, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதையடுத்து தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக, பத்மாவதி’ படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பத்மாவதி’ படத்திற்கு கமல் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவரது சமூக வலைத்தளத்தில், ‘பத்மாவதி’ பட பிரச்சனையில் தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

✔@ikamalhaasan

I wantMs.Deepika's head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We've said enough. Listen Ma Bharat

10:34 PM - Nov 20, 2017

என்னுடைய படங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளன. உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ, அதுபோல் திரைப்படத்திற்கு கருத்து சுதந்திரம் முக்கியம் என்று கூறியிருக்கிறார். இது சிந்திக்க வேண்டிய நேரம். நிறைய சொல்லியாகி விட்டது. கேட்டுக் கொள் பாரத மாதாவே! என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!