காதலுக்கு அர்த்தம் தேடுகிறேன் - திரிஷா ஓபன் டாக்...!

 
Published : Nov 20, 2017, 09:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
காதலுக்கு அர்த்தம் தேடுகிறேன் - திரிஷா ஓபன் டாக்...!

சுருக்கம்

Actress Trisha says that I am looking for a dictionary for the meaning of love.

காதல் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நானும் அகராதியில் தேடிக்கொண்டு இருக்கிறேன் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். 

1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்ற பின் திரிஷா தனது திரைப் பயணத்தை ஒருவித தயக்கத்துடன் தான் தொடங்கினார். ஆனால் அவரது தமிழ் முகம், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற குறும்பான தோற்றம் கோலிவுட்டில் அவருக்கான இடத்தை கிட்டத்தட்ட 18 வருட காலம் தந்துள்ளது.

சினிமா துறையில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ள  திரிஷா சினிமாவைத் தாண்டியும் சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடன் செயல்பட்டு வருகிறார். 

சினிமா நடிகையாக மட்டும் இல்லாமல், பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலம் என பலவேறு துறைகளில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். 

இதனிடையே தெலுங்கு நடிகர்  ராணாவையும் திரிஷாவையும் இணைத்து கிசுகிசுக்கள்  வந்தன. 

அதன் பிறகு தமிழ் பட தயாரிப்பாளரும் தொழில் அதிபருமான வருண்மணியனுக்கும் திரிஷாவுக்கும் கடந்த ஜனவரி 23-ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. வருண்மணியன் வாயை மூடி பேசவும், காவியத் தலைவன் படங்களை தயாரித்துள்ளார். அடுத்து திரிஷாவை கதா நாயகியாக புது படம் எடுக்க தயாரானார்கள்.

ஆனால் திடீரென வருண்மணியனுக்கும் திரிஷாவுக்கும் இடையேயான காதல் முறிந்தது. திருமணமும் ரத்தானது. 

இந்நிலையில், யூனிசெஃப் அமைப்பு திரிஷாவுக்கு செலிப்ரிடி அட்வகேட் என்ற பதவியை வழங்கியுள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான யூனிசெஃப் –ன் நல்லெண்ண தூதராக திரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரிஷா நம்நாட்டில் விழிப்புணர்வு இல்லாததே எல்லாவிதமான பாலியல் குற்றங்களுக்கும் மூல காரணம் என தெரிவித்தார். 

இதையடுத்து காதல் சம்பந்தமான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், காதல் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நானும் அகராதியில் தேடிக்கொண்டு இருக்கிறேன் என தெரிவித்தார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!