இதிலும் சிங்கப்பூரை பின்பற்றலாம் இந்தியா... கமல் போட்ட ட்விட் சாத்தியமா?

First Published Oct 25, 2017, 7:30 PM IST
Highlights
kamal twit for follow the singapore?


விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு சில கருத்துக்களை இணைத்து படமாக்கி இருந்தார் அட்லீ.

அதில் மிகவும் முக்கியமானது, சர்ச்சையை ஏற்படுத்திய GST குறித்த வசனம். இதில் விஜய் 7 % GST பெறும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம் தரமாகக் கிடைக்கும் போது 28 % GST  பெறப்படும் இந்தியாவில் அப்படி ஏன் கிடைக்கவில்லை.  இதில் நாம் சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும் என்பது விஜய் பேசிய வசனம்.,

தற்போது உலக நாயகன் கமலஹாசன் இதே போல் மற்றொரு விஷயத்திலும் நாம் சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும் என கூறி ட்விட் செய்துள்ளார். அதில் சிங்கப்பூரில் சரியாக இரவு 12 மணிக்கு தேசியகீதம் இசைக்கப்படுகிறது. இதே போல் நமது நாட்டில் டிடி தொலைக்காட்சியில் தேசிய கீதம் இசைக்கப்படலாம். இதற்காக எனது நாட்டுப்பற்றை நிரூபிக்கவோ, பரிசோதிக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

 

Singapore plays it's national anthem every midnight.Likewise do so on DD. Do not force or test my patriotism at various random places.

— Kamal Haasan (@ikamalhaasan)

click me!