
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் கொந்தளிப்பு, குழப்பமான சூழ்நிலையைக் கண்டு கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல் ஹாசன், “ தமிழகத்தை இரண்டாக உடைத்து விடாதீர்கள். இந்தியா முழுவதும் தமிழகத்துக்காக அறவழியில் போராடும். அறியாமை உயிருடன் வெளிவரும்'' என்று தெரிவித்தார்.
தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், தமிழகம் பாதிக்கப்பட்டாலும், அல்லது முக்கியத்துவம் வாய்ந்த எந்த நிகழ்வு நடந்தாலும் நடிகர் கமல்ஹாசன் அறிவார்ந்த கருத்துக்களையும், விமர்சனங்களையும் கூறத் தவறுவதில்லை.
ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது இளைஞர்கள் நடத்திய தன் எழுச்சிப் போராட்டத்துக்கு டுவிட்டர் வழியாக ஆதரவு தெரிவித்து நெறிப்படுத்தினார். தமிழர்களை ‘பொறுக்கி’ என்று சுப்பிரமணிய சாமி அவதூறாக பேசிய போது பொங்கி எழுந்து, தனது கண்டனத்தை தமிழன் என்ற முறையில் பதிவு செய்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறி இருக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடி, சட்டசபைத் தலைவராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்து, முதல்வராக அமர்த்த உள்ளனர். அதற்கு ஏற்றார்போல், முதல்வர் பதவியையும் ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்துள்ளார். ஆனால், திடீரென சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து, தனது எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்தாார். இதனால், தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பான சூழல் நிலவியுள்ளது.
இந்நிலையில், டுவிட்டரில் நடிகர் கமல் ஹாசன் தமிழக அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது-
நாம் தவறான, ஊழல் அரசியல்வாதிகளை நமது பிரதிநிதிகளாகத் தேர்வு செய்து, நமக்கு கிடைத்த சுதந்திரத்தை நாம் சூதாடி பல ஆண்டுகளாக வீணடித்து விட்டோம். ஊழல் அரசியல்வாதிகளை குறை சொல்லுவதை தவிர்த்து, இனி நாம் ஊழல் இல்லாதவர்களாக மாறுவோம். முடியுமா?
இந்த நாட்டில் தமிழகத்தை இரண்டாக உடைத்து விடாதீர்கள். தமிழ்நாட்டுக்காக இந்தியா முழுவதும் அறவழியில் போராடும் என்று நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன். இந்த போராட்டத்தில் யாரும் மரணிக்கமாட்டார்கள், ஆனால், மக்கள் மனதில் உள்ள அறியாமை உயிருடன் வெளிவரும். இவ்வாறு அதில் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.