"சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியதில் தவறே இல்லை" - கமல் பரபரப்பு பேச்சு..!!

Asianet News Tamil  
Published : May 26, 2017, 02:47 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
"சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியதில் தவறே இல்லை" - கமல் பரபரப்பு பேச்சு..!!

சுருக்கம்

kamal says that nothing wrong in rajini said

நடிகர் கமல் கடந்த சில வருடங்களாக அரசியலில் அதிகமாக கவனம் செலுத்திவரும் கமல் ஹாசன் அரசியல் நிகழ்வுகளை தனது டுவிட்டரில் தமது ஆதரவையும் எதிர்ப்பையும் பதிவிட்டு வருகிறார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சினை என   கருத்து கூறியுள்ளார். 

இந்நிலையில், விஜய் டிவியின் பிக்பாஸ்யின் தொடக்க விழாவிற்குப்பின்  செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசினார். அப்போது இன்றைய அரசியல் பற்றி அடுக்கடுக்காக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தற்போது உள்ள சூழ்நிலையில் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்றார். பணம் சம்பாதிக்க அரசியல் ஒரு வழியல்ல என்றும் கூறினார்.  எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு நல்ல சம்பளம் தரவேண்டும் என்றும் கூறினார்.

நான் பல ஆண்டுகளாகவே அரசியலில் இருக்கிறேன். நான் ஓட்டு போட ஆரம்பித்தது முதல் நான் அரசியல்வாதிதான் என்றார். தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லோரும் தமிழர்தான், நான் தமிழன், இந்தியன்தான், நான் இந்தியனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தற்போதைய சூழலில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும், அப்படி  தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் கமல் தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என கூறியிருக்கிறார் என கேட்டதற்கு சிஸ்டம் சரியில்லை என ரஜினி சொன்னதில் தவறில்லை வித்யாசமானதுமில்லை என பதிலளித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

18 லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பிரபலம்... அவசரப்பட்டுட்டியே தலைவா என குமுறும் ரசிகர்கள்
தலைகீழாக மாறிய டாப் 10 சீரியல் டிஆர்பி ரேட்டிங்... சன் டிவிக்கு சம்மட்டி அடி கொடுத்த விஜய் டிவி..!