’சலூனில் கூட வேலை பார்த்திருக்கிறேன்’...தந்தை சிலை திறப்பு விழாவில் கமல் பேச்சு...

By Muthurama LingamFirst Published Nov 7, 2019, 1:32 PM IST
Highlights

அப்போது பேசிய அவர்,’இளம் வயதில் எனக்கு அரசியல் ஆசை அறவே கிடையாது. சுதந்திரப்போராட்ட வீரராக இருந்ததால் என் அப்பா மட்டுமே நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று விரும்பினார். ஆனால் அதையெல்லாம் நாங்கள் யாருமே பொருட்படுத்தவில்லை. ஆனால் நான் இன்றைக்கு அரசியலுக்கு வந்தே தீரவேண்டியதாகி விட்டது.

சினிமா வாய்ப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருந்தபோது சுமார் ஒன்றரை மாதங்கள் சலூனில் கூட வேலை பார்த்திருக்கிறேன். பின்னர் சலூன் முதலாளி என் வீட்டில் போட்டுக் கொடுத்ததால்தான் அந்த வேலையை விட வேண்டி வந்தது’என்று கமல் தன் பிறந்தநாள் விழாவில் மனம் திறந்து பேசினார்.

மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் 65-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.இதற்காக நேற்று இரவு மதுரை வந்த கமல்ஹாசன் இன்று காலை 9 மணிக்கு காரில் பரமக்குடிக்கு புறப் பட்டார். வழிநெடுக அவரது ரசிகர்கள் திரண்டு வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். காலை 10.30 மணிக்கு பரமக்குடிக்கு வந்த கமல்ஹாசனை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்றனர்.

பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கமல்ஹாசனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தந்தை வக்கீல் சீனிவாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கமல் ஹாசன், அவரது சகோதரர் சாருஹாசன் மற்றும் குடும்பத்தினர் திறந்து வைத்தனர். அந்த விழாவில் பேசிய கமல் தனது அரசியல் பிரவேசம் குறித்து தந்தை எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பது குறித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர்,’இளம் வயதில் எனக்கு அரசியல் ஆசை அறவே கிடையாது. சுதந்திரப்போராட்ட வீரராக இருந்ததால் என் அப்பா மட்டுமே நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று விரும்பினார். ஆனால் அதையெல்லாம் நாங்கள் யாருமே பொருட்படுத்தவில்லை. ஆனால் நான் இன்றைக்கு அரசியலுக்கு வந்தே தீரவேண்டியதாகி விட்டது.

இளம் வயதில் நான் எவ்வளவோ வேலைகள் பார்த்திருக்கிறேன்.சுமார் ஒன்றரை மாதங்கள் வீட்டுக்குத் தெரியாமல் ஒரு சலூனில் கூட வேலை பார்த்திருக்கிறேன்.பின்னர் சலூன் முதலாளி என் வீட்டில் போட்டுக் கொடுத்ததால்தான் அந்த வேலையை விட வேண்டி வந்தது. ஆனால் அங்கு கற்றுக்கொண்ட அனுபவம் எனக்கு சினிமாவில் எடிட்டிங், இயக்கம் போன்ற தொழில்களைக் கற்றுக்கொள்ள மிக உபயோகமாக இருந்தது. எனவே வேலைகளில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவுமே இல்லை’என்றார் கமல்.

click me!