அத்தனை அரசியல்வாதிகளையும் ’போடா வாடா’ போட்டு அழைத்த கமல்.... தெறிக்கும் வீடியோ...

Published : Apr 17, 2019, 08:52 AM IST
அத்தனை அரசியல்வாதிகளையும் ’போடா வாடா’ போட்டு அழைத்த கமல்.... தெறிக்கும் வீடியோ...

சுருக்கம்

சினிமாவில் கேரவனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கமல் அரசியலில் உச்சி வெயிலில் நடமாடி வந்ததால் மண்டை சூடாகி அத்தனை அரசியல்வாதிகளையும் ஒருமையிலும் ‘போடா வாடா’ போட்டும் அழைத்துள்ளார்.

சினிமாவில் கேரவனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கமல் அரசியலில் உச்சி வெயிலில் நடமாடி வந்ததால் மண்டை சூடாகி அத்தனை அரசியல்வாதிகளையும் ஒருமையிலும் ‘போடா வாடா’ போட்டும் அழைத்துள்ளார்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி உத்தியாக  வீடியோ பிரச்சாரங்களில் இறங்கிய கமல் டி.வி.பெட்டிகளை உடைத்தும், சகல அரசியல்வாதிகளையும் சகட்டுமேனிக்கு விமர்சித்தும் வந்தார். இந்த பிரச்சாரத்துக்கு பாஸிடிவாகவும் நெகடிவாகவும் நிறைய ரெஸ்பான்ஸ் இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை வெளியிட்ட வீடியோவில் ...ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்ற பாஜக விளம்பரத்தையும் இவர்-அவர் என்று பாராமல் அரசியல் கட்சி தலைவர்களை சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளியுள்ளார்.

மக்கள் பிரச்சனைக்காக நான் போராட்டம் நடத்தி கேள்வி கேட்டபோது, 'நீ யார்டா அதெல்லாம் கேட்பதற்கு, நீ ஒரு நடிகன், உனக்கு என்ன தெரியும்? களத்தில் இறங்கிப்பார்’ என்று சவால் விட்டார்கள். 

சரி, சொல்றாங்களே.. இறங்கித்தான் பார்ப்போமே என்று நான் உசுரா நெனச்சிக்கிட்டிருந்த தொழிலை விட்டுட்டு இங்கே வந்தா, இப்போ ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர்.

‘என்னத்தாண்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?’ இதை நான் கேட்கிறேன் என கமல்ஹாசன் ஆவேசம் பொங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!