ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடிக்காமல், தேர்வு செய்யும் கதையிலும், கதாப்பாத்திரத்தில் வித்தியாசம் காட்டி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடிக்காமல், தேர்வு செய்யும் கதையிலும், கதாப்பாத்திரத்தில் வித்தியாசம் காட்டி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார், கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக கூட நடிப்பேன் என ஓப்பனாக பேசும் இவர், வழக்கமான ஹீரோயின் போல், மரத்தை சுத்தி சுத்தி வந்து டூயட் பாடி, அழுது புலம்பும் கதை என்றால், கேட்ட உடனேயே குட் பை சொல்லி விடுகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான 'அவள்' , 'வடசென்னை', 'தரமணி' போன்ற படங்களில் இவரின் கதை வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. இப்படங்களில் நடித்ததற்காக இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களும் கிடைத்தது.
இப்படங்களை தொடர்ந்து, கதாநாயகியை மையப் படுத்தி எடுக்க உள்ள 'மாளிகை' என்ற படத்தில் ஆண்ட்ரியா நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் அவர் 2 வேடங்களில் நடிக்கிறார். துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி மற்றும் இளவரசி ஆகிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை சில கன்னடப் படங்களை இயக்கியுள்ள 'தில் சத்தியா' இயக்குகிறார். இது ஒரு பழிவாங்கும் பேய் படம் என்றும், இந்த படத்தில் ஆண்ட்ரியா மிகுந்த ஆர்வத்துடன் நடித்து வருவதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.