விவாகரத்தான இரண்டே வருடத்தில்... இரண்டாவது திருமணம் செய்த பிரபல தொகுப்பாளினி! வெளியானது புகைப்படம்!

Published : Apr 16, 2019, 07:23 PM IST
விவாகரத்தான இரண்டே வருடத்தில்... இரண்டாவது திருமணம் செய்த பிரபல தொகுப்பாளினி! வெளியானது புகைப்படம்!

சுருக்கம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமாகியவர் 'பூஜா'.  'களம்' 'பீட்சா' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு, அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  

மேலும் கடந்த வருடம், தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் இருந்த, உறவை பரஸ்பரம்மாக முறித்து கொள்வதாக அறிவித்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இனி தன்னுடைய முழு கவனத்தையும் திரைப்படங்கள் நடிப்பதில் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரையே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் அவ்வப்போது அவருடைய ஆண் நண்பருடன் எடுத்து கொண்ட நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதி செய்தார்.

இந்நிலையில் விவாகரத்தான இரண்டே வருடத்தில்,  KGF பட புகழ் ஜான் என்பவரை நேற்று (ஏப்ரல் 15) எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?