விக்ரமை தொடர்ந்து ரஜினி இயக்குனருடன் இணையும் உலக நாயகன் ; ஒரே வரியில் அனுமதி பெற்ற இயக்குனர்...

By Kanmani PFirst Published Nov 9, 2021, 7:52 PM IST
Highlights

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நடிகர் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7 ஆம் தேதி கண்டார். இதையொட்டி விக்ரம் படக்குழுவினர் ஒரு வாரத்திற்கு முன்பே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். பின்னர் விக்ரம் படக்குழுவினர் சிறப்பு வீடியோவையும்  வெளியிட்டு கமலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

கமல் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் முக ஸ்டாலின், சீமான், கவிஞர் வைரமுத்து, கஸ்தூரி, குஷ்பூ இயக்குனர் மோகன்ராஜா, ராதிகா என பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில் கமலை நேரில் சந்தித்து பா.ரஞ்சித் வாழ்த்து கூறியிருந்தார். அந்த சந்திப்பின் போது ஒரு வரியில் படக்கதை கூறியதாகவும் அந்த கதை பிடித்ததால் முழு கதையையும் உருவாக்கு மாறும் அதில் தான் நடித்து கொடுக்க சம்மதம் என்றும் கமல் தெரிவித்ததாக தகவல் கசிந்துள்ளது.

அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி ,சார்பேட்டை பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதோடு பரியேறும் பெருமாள்’ , 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', ரைட்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவரின் கதைகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஆழப்பதிவதாகவே இருந்ததுள்ளது.  அதே சாயலில் வெளிவந்த கர்ணன், ஜெய் பீம் உள்ளிடட படங்கள் மக்கள் மத்தியில் பேசப்படும் படங்களாக வெற்றியடைந்துள்ளது. இதன் காரணமாவே பா.ரஞ்சித்தின் புதிய கதைக்கு  கமல் ஒப்புதல் தந்திருக்க கூடும் என சொல்லப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!