சிக்கலில் சிக்கிய கமல்... நம்பி வச்ச இயக்குநரே வச்சி செஞ்ச காரியம்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Nov 9, 2020, 1:27 PM IST

ஆம்... படத்தின் டைட்டில் டீசர் நெட்பிலிக்ஸில் உள்ள நார்கோஸ் மெக்சிக்கோ சீசன் 2 என்ற வெப் தொடரின் டீசரை கொஞ்சம் மாற்றி காப்பி அடித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா தாக்கம் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது.

Tap to resize

Latest Videos

அடுத்ததாக கமல் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்க என மாஸ் படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இடையில் ரஜினிகாந்த் அந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிர்வனம் மூலம் படத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாது நடிக்கவும் உள்ளார். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு உலக நாயகனின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். கமலின் 232வது படமான அதற்கு படக்குழு விக்ரம் என பெயர் வைத்துள்ளது. டைட்டில் டீசர் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான நிலையில், காப்பி பெஸ்ட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 

 

இதையும் படிங்க: எல்லை மீறும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி... படுஓபனாக கொடுத்த கவர்ச்சி போஸால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

ஆம்... படத்தின் டைட்டில் டீசர் நெட்பிலிக்ஸில் உள்ள நார்கோஸ் மெக்சிக்கோ சீசன் 2 என்ற வெப் தொடரின் டீசரை கொஞ்சம் மாற்றி காப்பி அடித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செட், லைட்டிங், சாப்பாட்டு மேசை என பல விஷயங்கள் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கைதி படம் ஹாலிவுட் காப்பி என்றும், மாஸ்டர் போஸ்டர் கூட பல படங்களின் காப்பி தான் என்றும் லோகேஷ் கனகராஜ் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் உலக நாயகன் படத்திலும் அதே வேலையை செய்துவிட்டாரா? என ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

click me!