
குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படம் மூலம் அறிமுகம் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன் சாதனைகள் பஞ்சமில்லாதவை.
நடிப்பு மட்டும் இல்லாமல், ஆடல், பாடல், இயக்கம், தயாரிப்பு என பல்வேறு துறைகளிலும் அசத்தி கட்டிய மனிதர். அதேபோல் தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளை எப்போதும் சந்திப்பவர்.
கடந்த சில தினங்களுக்கு முன் இவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்த நடிகை கௌதமி இவரை விட்டு பிரிந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மேலும் நடிகர் கமல் ஹாசனுக்கு நெருக்கமாக இருந்த 9 பேர் இது வரை புற்றுநோயால் பாதிக்க பட்ட செய்தி தற்போது உலா வர தொடங்கி இருக்கிறது.
கமலின் நெருங்கிய நண்பரும் அற்புதமான பாடகருமான சாகுல் ஹமீது புற்றுநோய் தாக்கி இறந்து போனார். கமல் இரண்டு நாட்கள் கதறி அழுதார்.
அதன் பின் கமல் நெருங்கிய நண்பர் சண்டைப் பயிற்சியாளர் விக்ரம் தர்மா புற்றுநோய் வந்து இறந்தார் என்பது குறிப்பிடதக்கது.
கமலின் இன்னொரு நண்பரும் சக நடிகருமான ஜெய்கணேஷ் புற்றுநோய் பாதிப்பால் தான் இறந்தார்.
கமலின் தூரத்து உறவினரான ரயில் பயணங்கள் படத்தின் நாயகியாக நடிகை ஜோதியும் புற்று நோய் பாதிப்பால் இறந்து போனார்.
ஒரு காலத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் காதலித்த நடிகை ஸ்ரீவித்யா புற்றுநோய் வந்து கேரளா போய் முடங்கிவிட்டார். அதிர்ந்து போய் ஓடிசென்று பார்த்த கமல் முடியெல்லாம் கொட்டி எலும்பும் தோலுமாக கிடந்த ஸ்ரீ வித்யாவை கட்டி அணைத்து மணிகணக்கில் கதறினார் என்பது குறிப்பிடதக்கது .
இப்படி நீண்ட லிஸ்டில் கடைசியாய் நடிகை கௌதமிக்கும் மார்பகப் புற்று நோய். ஒரு பக்க மார்பை நீக்கினார்கள். அவரையும் கமல் தான் காப்பாற்றினார்.
இப்படி ஒரு ஒற்றுமை எப்படி இயற்கையாக நடந்தது என்பது அதிர்ச்சியாகவே உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.