கமலுக்கு பல ஹிட்டுகளை வாரிக்கொடுத்த இயக்குநருக்கு கொரோனா தொற்று... கவலையில் ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 17, 2020, 02:08 PM IST
கமலுக்கு பல ஹிட்டுகளை வாரிக்கொடுத்த  இயக்குநருக்கு கொரோனா தொற்று... கவலையில் ரசிகர்கள்...!

சுருக்கம்

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசான் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

திரையுலகில் கொரோனா பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஷூட்டிங் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தாலும் எப்படி தான் திரைப்பிரபலங்கள் தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்பது தெரியவில்லை. அமிதாப் பச்சனில் ஆரம்பித்து நடிகை நிக்கி கல்ராணி வரை பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்னும் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். 

இதனால் கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே பாலிவுட் டூ கோலிவுட் பிரபலங்கள் பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு பல ஹிட்  படங்களை கொடுத்த பிரபல இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல் நடித்த சலங்கை ஒலி, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா, ராஜபார்வை என பல படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். 

 

இதையும் படிங்க: “இது சூர்யா, ஜோதிகா, சிவக்குமாரின் கூட்டுச்சதி”... மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசான் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சிங்கீதம் சீனிவாசராவ், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். 88 வயதாகும் அவருக்கு நுரையீரலில் எவ்வித தொற்றும் இல்லை என்பதாலும், லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாலும் வீட்டிலே சிகிச்சையை தொடர மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொஞ்ச நேரத்துல சாவு பயத்த காட்டிய கார்த்திக்; மீண்டும் கம்பி எண்ண சென்ற மூவர் கூட்டணி!
சின்னத்திரை வரலாற்றில் அதிக TRP-ஐ வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?