14 மொழிகளில் வசனம் பேசி அசத்தியுள்ளாராம் கமலஹாசன். இவர் நடிப்பை பார்த்த படப்பிடிப்பு தளமே பிரம்மிப்பில் உறைந்து போனதாக கூறப்படுகிறது.
விக்ரமின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு,உலக நாயகன் கமல்ஹாசன் தனது அடுத்த பெரிய படமான இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஷங்கர் இயக்கும், இதில் ரகுல் ப்ரீத் சிங் , பிரியா பவானி சங்கர் , சமுத்திரக்கனி , பாபி சிம்ஹா ,குரு சோமசுந்தரம் , டெல்லி கணேஷ் , ஜெயபிரகாஷ் , வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். முன்னதாக விக்ரம் படத்திற்கும் இவரின் இசை தான்.
கடந்த 1996 இல் வெளியான இந்தியன் பிளாக் பாஸ்டர் படமாக அமைந்தது. ஊழலுக்கு எதிராக கொலை மிரட்டல் விடும் சுதந்திரப் போராட்ட வீரரின் கதைக்களத்தைக் கொண்டு தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சென்னை, போபால் உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடத்தினர். ஆனால் 2020இல் நடந்த கிரேன் விபத்தால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதை அடுத்து கொரோனா ஊரடங்கு, தயாரிப்பு நிறுவனத்துடன் பிரச்சனை என பல ஆண்டுகள் தள்ளிப்போனது. பின்னர் ஒரு வழியாக ரெட் ஜெயண்ட் உதவியோடு தயாரிப்பு நிறுவனத்துடனான சண்டை ஓய்ந்த்தை அடுத்து படக்குழுவினர் தற்போது படப்பிடிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வெளியீட்டு உரிமை ரெட் ஜெயன்ட் சாட்டிலைட் உரிமை சன் டிவி PS 1 வளைத்து பிடித்த திமுக குடும்பம்
அதோடு கமலஹாசனின் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளை இயக்க சங்கரின் உதவி இயக்குனர்களாக இருந்து தற்போது பிரபல இயக்குனர்களாக மாறியுள்ள வசந்த பாலன், அறிவழகன், சிம்பு தேவன் ஆகியோரை சங்கர் களம் இறக்கி உள்ளார். ஏனெனில் இயக்குனர் சங்கர் தற்போது ராம்சரனின் 15 வது படத்தில் பிசியாக இருப்பதால் மற்ற காட்சிகளை இயக்க இந்த மூன்று இயக்குனர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்!
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமல் செய்த சாதனை குறித்த தற்போது தகவல் காட்டு தீயாக பரவி வருகிறது.பிரமாண்ட நடிப்பிற்கு பெயர் போன கமல் விக்ரம் படத்தில் தனது உடல் நலத்திற்கு மிஞ்சிய நடிப்பை வெளிப்படுத்தி இளம் ரசிகர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். தற்போது இந்தியன் 2வில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளாராம். அதாவது இந்த படத்தில் சிங்கிள் ஷார்ட் காட்சி ஒன்றை டேக் எடுக்காமல் நடித்து முடித்து கொடுக்கிறார். பத்து நிமிடங்கள் வரை ஓடும் ஒரு சிங்கிள் ஷாட் காட்சியை அசராமல் நடித்ததோடு , 14 மொழிகளில் வசனம் பேசி அசத்தியுள்ளாராம் கமலஹாசன். இவர் நடிப்பை பார்த்த படப்பிடிப்பு தளமே பிரம்மிப்பில் உறைந்து போனதாக கூறப்படுகிறது.