Kamal Surprises Fans: நேரலையில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த கமல்..!நம்பவே முடியல, கண்ணீர் விட்டு அழுத ரசிகர்கள்...

Anija Kannan   | Asianet News
Published : May 25, 2022, 06:20 PM ISTUpdated : May 25, 2022, 06:23 PM IST
Kamal Surprises Fans: நேரலையில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த கமல்..!நம்பவே முடியல, கண்ணீர் விட்டு அழுத ரசிகர்கள்...

சுருக்கம்

Kamal Haasan Surprises Fans video: கமல் நடிப்பில் ஜூன் 3-ந் தேதி  'விக்ரம்' படம் வெளியாக இருப்பதால், தற்போது ரசிகர்களை சர்ப்ரைசாக கமல் சந்திக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கமல் நடிப்பில் ஜூன் 3-ந் தேதி  'விக்ரம்' படம் வெளியாக இருப்பதால், தற்போது ரசிகர்களை சர்ப்ரைசாக கமல் சந்திக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

நட்சத்திர பட்டாளங்கள்:

கைதி, மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் விக்ரம். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசனை திரையில் காணப்போகிறோம் என்ற உற்சாகத்தில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

படம் ரிலீஸ் 

இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

 படத்தின் புரமோஷன் பணிககள்:

ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி உள்ளதால் படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக படக்குழு இறங்கியுள்ளது. அந்தவகையில்  'சோனி மியூசிக்' சார்பில் ஃபேன் பாய் மொமென்ட் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

கமல்ஹாசன் சர்ப்ரைஸ் விசிட்:

அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் சிலர்,  அவரை பிடிப்பதற்கான காரணங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் அவரை ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அப்போது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில்,  கமல் அவர்களுக்கு பின்னால் வந்து நின்று சர்ப்ரைஸ் கொடுக்கிறார். 

கண் கலங்கிய ரசிகர்கள்:

அவரை பார்த்த அதிர்ச்சியில் ரசிகர்கள் கண்கலங்கியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  மேலும், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இதேபோன்று ரசிகர்களை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ அண்மையில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க....Aishwarya Rai: வெறும் 1,500 ரூபாய்க்காக விளம்பரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்...இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?