மகேஷ் பாபுவின் தந்தை.. நடிகர் கிருஷ்ணாவின் திருவுருவச் சிலையை திறந்து வைத்த உலக நாயகன்!

By manimegalai a  |  First Published Nov 10, 2023, 1:15 PM IST

'இந்தியன் 2' படப்பிடிப்புக்காக விஜயவாடா சென்றுள்ள உலக நாயகன் கமல், இன்று நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை, மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் சிலையை திறந்து வைத்தார்.
 


உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பிற்காக விஜயவாடா சென்றுள்ளார் கமல். தன்னுடைய கலை பணிக்கு இடையே, டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அழைப்பை ஏற்று, விஜயவாடாவில் அவருடைய தந்தை மறைந்த டோலிவுட் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் சிலையை இன்று திறந்து வைத்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், விஜயவாடா கிழக்கு தொகுதி YCP இன்சார்ஜ் தேவிநேனி அவினாஷ் கலந்து கொண்டார். சிலை திறப்புக்கு பின்னர் பேசிய அவினாஷ், தெலுங்கு மக்களின் அபிமானமான நடிகர் கிருஷ்ணா சிலை விஜயவாடாவில் திறக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

Japan Review: ஜப்பானாக கார்த்தி ஜொலித்தாரா? அல்ல சோதித்தாரா.. திரைப்பட விமர்சனம் இதோ..!

அவரது வாரிசான மகேஷ் பாபு திரையுலகில் தனக்கென தனி முத்திரை பாதித்துள்ளது மட்டும் இன்றி, சேவைத் துறையிலும் முன்னணியில் இருப்பதாகவும் அவர் பாராட்டினார். அதே போல் எப்போதும் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், விஜயவாடா வந்து நடிகர் கிருஷ்ணாவின் சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், விஜயவாடா மக்கள் சார்பிலும், மகேஷ் பாபு ரசிகர்கள் சார்பிலும் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியன் 2 படத்திற்காக தற்போது விஜயவாடா சென்றுள்ள கமல் சில நாட்கள் அங்கு தங்குகிறார். அதே நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங்கிற்காக ஒரு நாள் மீண்டும் சென்னை திரும்பும் கமல், அதன் பின்னர் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.  சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட்ட நிலையில், விஜயவாடாவில் சுமார் 8000 பேருடன் எடுக்க கூடிய பிரமாண்ட காட்சியை படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!