#Kamal Haasan :மழையில் மூழ்கிய பிரபலத்தின் குடோன் : கமல்ஹாசனின் பொக்கிஷங்கள் சேதம்...

By Kanmani PFirst Published Nov 11, 2021, 12:58 PM IST
Highlights

கமலுக்கு சொந்தமான குடோனில் மழை  நீர் புகுந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த ராஜ் கமல் பிலிம்ஸ்க்கு சொந்தமான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்  நடிகர் கமல்ஹாசனால் நிறுவப்பட்ட.  1981 -ம் ஆண்டு ஹாசன் சகோதரர்கள்  என்ற பெயரில் ராஜ பார்வை திரைப்ப டத்தைத் தயாரித்து வெளியிட்ட பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என இந்நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. தற்போது கமல்ஹாசனின் சகோதரர்கள், சாருஹாசன் மற்றும் சந்திரஹாசனின் கீழ்  இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

கமல் நடிப்பில் வெளியாகி ஹிட்  அடித்த விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், சதிலீலாவதி, ஹேராம், விருமாண்டி,உத்தம வில்லன், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. அதோடு மகளிர் மட்டும்,மும்பை எக்ஸ்பிரஸ், கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களை தயரித்துள்ளது.   

அதோடு 24 ஆண்டுகளுக்கு முன்பு கமல் இயக்கத்தில் உருவாக தயாராக இருந்த   மருதநாயகம் திரைப்படத்தையும் ராஜ் கமல் பிலிம்ஸ் தான் தயாரித்திருந்தது.1997ம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதிதான் மருதநாயகம் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கின. 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முகமது யூசுஃப் கான் குறித்த திரைப்படம்தான் இது. எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார். ஏறத்தாழ 20 நிமிடங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். இதன் காரணமாக சர்வதேச கவனம் அந்த திரைப்படத்தின் மீது குவிந்தது.

ராணியுடன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிவாஜி கணேசன் ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இங்கிலாந்து ராணிக்கு அந்த திரைப்படத்தின் ஒரு சண்டை காட்சியும் காட்டப்பட்டது.

கமலின் விஸ்வரூபம் 2வை தயாரித்த  இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது விக்ரம் 2 படம் உருவாகியுள்ளது. கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கத்தில் தயராகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அனிருத் ரவிசந்திரன் இசையமைத்து வருகிறார்.

இவ்வாறு ராஜ் கமல் பிலிம்ஸ் தயரிப்பில் உருவான படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் சென்னையில்  கமலுக்கு சொந்தமான குடோனில் வைக்கப்பட்டுள்ளது. 

பல கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மிகப்பெரிய கட்டிடமாக இது மலை வெள்ளத்தில் தற்போது தத்தளித்து வருவதாக சொல்லப்படுகிறது. கட்டிடத்திற்குள் புகுந்த தண்ணீரால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் வீணாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

click me!