கமலின் ஆஸ்தான இயக்குனர் "என்.கே.விஸ்வநாதன்" மரணம்...

 
Published : Apr 26, 2017, 01:50 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
கமலின் ஆஸ்தான இயக்குனர் "என்.கே.விஸ்வநாதன்" மரணம்...

சுருக்கம்

kamal favorite director n.k.vishwanathan death

தமிழ் திரையுலகில், உலக நாயகன் கமலஹாசன் நடித்த பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான  என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென காலமானார்.

கடந்த சில வருடங்களாக,  உடல்நலகுறைவால் அவதி பட்டு வந்த அவர்   திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.

கமல்ஹாசன் நடித்த 'சட்டம் என் கையில்', 'கல்யாண ராமன்', 'கடல் மீன்கள்', 'மீண்டும் கோகிலா', 'சங்கர்லால்', போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள என்.கே.விஸ்வநாதன்...

 'இணைந்த கைகள்', 'நாடோடி பாட்டுக்காரன்', 'பெரிய மருது', உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு நமீதா நடித்த 'ஜகன்மோகினி' என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மரணத்திற்கு கோலிவுட்டை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!