சம்பளம் கொடுக்காமல் டபாய்த்த கமல்ஹாசன்…. புலம்பித் தவிக்கும் நடிகை !!

 
Published : Feb 25, 2018, 11:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
சம்பளம் கொடுக்காமல் டபாய்த்த கமல்ஹாசன்…. புலம்பித் தவிக்கும் நடிகை !!

சுருக்கம்

Kamal did not pay salary to gowthamy

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான  கமலஹாசன், அவரது படங்களில் பணியாற்றியதற்கான சம்பளத்தை தனக்கு இன்றும் செட்டில் பண்ணவில்லை என நடிகை கௌதமி குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் கமலஹாசன் தனது இரண்டாவது மனைவி சரிகாவை விவாகரத்து செய்த பின் நடிகை கௌதமியுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்த இவர்களுக்குள் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.



இந்நிலையில் நடிகை கெளதமி, நடிகர் கமலின் படங்களில் பணியாற்றியதற்கான சம்பளப் பாக்கியை முறையாக கொடுக்கவில்லையென குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நானும் கமலும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிந்தோம். தசாவதாரம், விஸ்வரூபம் உள்ளிட்ட அவரது முந்தைய படங்களில் பணியாற்றியதற்கான சம்பள பாக்கியை அவர் இன்னும் வழங்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.



அந்த சம்பள பாக்கிதான் என் வாழ்க்கையைக் கட்டமைக்க எனக்கு இருக்கும் ஒரே பொருளாதார வாய்ப்பு என்றும்,  கமல் மற்றும் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெற பலமுறை முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கௌதமி அதில் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி