மகள் நடித்த படத்தைப் பார்க்காமலேயே மரணம்…. ஸ்ரீதேவிக்கு நேர்ந்த சோகம் !!

 
Published : Feb 25, 2018, 10:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
மகள் நடித்த படத்தைப் பார்க்காமலேயே மரணம்…. ஸ்ரீதேவிக்கு நேர்ந்த சோகம் !!

சுருக்கம்

Actor Sri devi daughter Janvi film

இந்திய திரையுலகில்   பிரபல நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி, தனது மகள் ஜானவி நடித்த  முதல் படம் வெளியாவதற்கு முன்பே, மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி மற்றும் ரிஷிகபூர் என இந்திய சினிமாவில் பல உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.



பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி, 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

விஜய் கதாநாயகனாக நடித்த புலி என்ற தமிழ்படத்திலும் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான மாம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்பின், தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

இந்நிலையில், துபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு அங்கே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்துள்ளார். இந்த செய்தியை அவரது உறவினர்களும் உறுதிசெய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்திருக்கும் முதல்படம் ‘தடக்’ வரும் ஜூலை மாதம் வெளியாகும் நிலையில், அப்படத்தை பார்க்காமலே அவர் உயிர் பிரிந்துள்ளது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீதேவி தனது இரு மகள்கள் மீதும் மிகுந்த பாசம் வைத்திருந்தார். அவர்களது வாழ்க்கைக்காவே நடிப்பிப்பில் இருந்து விலகி இருந்தார். அதே நேரத்தில் தனது மகள் ஜான்வியை மிகப் பெரிய நடிகையாக்க வேண்டும் என்ற கனவில் மிதந்து வந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக ஸ்ரீதேவி மறைந்ததுஅவரின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய இழப்பான கருதப்படுகிறது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி