அன்புக்கு எந்த மதமும் கிடையாது... புத்தமதம் மாறிய மகளுக்கு கமலஹாசன் வாழ்த்து!

 
Published : Jul 28, 2017, 09:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
அன்புக்கு எந்த மதமும் கிடையாது... புத்தமதம் மாறிய மகளுக்கு கமலஹாசன்  வாழ்த்து!

சுருக்கம்

kamal daughter jion in buddist....kamal wish her akshara

அன்புக்கு எந்த மதமும் கிடையாது...புத்தமதம் மாறிய மகளுக்கு கமலஹாசன்  வாழ்த்து!

கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் புத்த மதத்திற்கு மாறியதற்கு, கமல் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும் என கடவுள் நம்பிக்கை குறித்து தன் கருத்துக்களை முன் வைத்து வரும் கமல், தன் மகள் விஷயத்தில் எப்படி இருப்பார் என்று சொல்லவா வேண்டும் ?.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கான புரமோஷன்களில் அதில் நடித்துள்ள அக்‌ஷரா ஹாசன் பங்கேற்று வருகின்றார்.

அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அக்‌ஷரா ஹாசன், “நான் முதலில் நாத்திகராக இருந்தேன். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, இருப்பினும் கடவுளை நேசிப்பவர்களை நான் மதித்து வந்தேன். இப்போது புத்த மதத்திற்கு மாறிவிட்டேன். அதில் வாழ்வியலோடு கலந்த பல விஷயங்கள் உள்ளதால் அதில் என்னை இணைத்துக் கொண்டேன்.” என தெரிவித்திருந்தார்.

அக்ஷரா ஹாசனின் மத மாற்றம் குறித்து கமல் தன் டுவிட்டரில், “ஹாய், அக்‌ஷு, நீ மதம் மாறிவிட்டாயா. அப்படி மாறினாலும் உன் மேல் உள்ள அன்பு மாறாது. எனக்கு. மதத்தை போன்று அன்பு நிபந்தனை அற்றது. என தெரிவித்துள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ