விக்ரமை வைத்து அயன்-2 இயக்குகிறார் கே.வி.ஆனந்த்…

Asianet News Tamil  
Published : Jul 28, 2017, 10:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
விக்ரமை வைத்து அயன்-2 இயக்குகிறார் கே.வி.ஆனந்த்…

சுருக்கம்

Ayyan 2 is directed by Vikram and KV Ananth ...

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் நடிகர் விக்ரமுடன் இணைந்து ‘அயன் 2’ படத்தை இயக்க இருக்கிறாராம்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, பிரபு, தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘அயன்’.

2009-ல் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றிப் பெற்றது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பு. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கே.வி.ஆனந்த் இயக்க முடிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் தற்போது சூர்யாவுக்கு பதிலாக அவர் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம்-ஐ  நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

‘அயன் 2’ படத்தின் ஒன்லைன் கதையை விக்ரமிடம் கூறி அனுமதி கூட வாங்கிவிட்டாராம். அடுத்து என்ன கூடிய விரைவில் ஷூட்டிங்க் ஸ்டார் பண்ண வேண்டியது தான்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chatha Pacha: மலையாளத்தில் அதிரடி வெற்றி... தமிழில் களம் இறங்கும் 'சத்தா பச்சா' - டிரெய்லர் ரிலீஸ்!
Dhanush Son: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயந்த தனுஷ் மகன் லிங்கா? ரஜினி பேரனை அப்செட் ஆக்கிய சமூக வலைதள கிண்டல்கள்?!