
பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென்று தோன்றிய கமல் ஒரு வரமாக ஒவ்வொருவரும் நடந்து கொண்ட விதம் பற்றி பேசும்போது ஜூலியை “என்னா தங்கச்சி” என்று கேட்டு கலாய்த்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் தவிர ஜல்லிக்கட்டில் கோஷம் போட்டு பிரபலமான ஜூலியும் அழைத்திருந்தனர்.
ஜல்லிக்கட்டில் ஜூலி மிகப்பெரிய வீரமங்கை போன்றும் புரட்சியாளர் போன்றும் பிம்பமாக்கப்பட்டிருந்தார்.
பிக் பாஸ் முதல் நாள் நிகழ்ச்சியில் தலையில் சிவப்பு துண்டு கட்டி கொண்டு புரட்சி ரத்தம் வீரம் என்றெல்லாம் பேசி நிகழ்ச்சிக்குள் வந்தவர் இரண்டாம் நாளே அழ ஆரம்பித்து விட்டார்.
லொட லொட வென்று பேசிக்கொண்டு காமெடி பீசாக ஜூலி காட்சிப்படுத்தப்பட்டார்.
ஒரு கட்டத்தில் யாரும் என்னை சேர்க்க மறுக்கிறார்கள் என்று புலம்பி கதறி அழுதார்.
இது வாட்ஸ்-ஆப் பேஸ்புக் வலைதளங்களில் கிண்டலடிக்கபட்டது.
நேற்றைய நிகழ்ச்சியில் இதை குறிப்பிட்டு பேசிய கமல் “என்னா தங்கச்சி.. பல லட்சம் பேர் இருந்த கூட்டத்துல சாப்பாடு வசதி எதுவும் இல்லத நிலைமைல அவ்ளோ வீரமா கோஷம் போட்டுட்டு இருந்த.. இங்க ஜாலியா ஏசி ரூம் சகல வசதி சாப்பாடு எல்லாம் இருக்கு.. ஆனா இப்படி அழுவுறியே” என்று கேட்டார்.
“இல்லண்ணே என் வீட்டு நியாபகம் வந்துடுச்சி அழுதுட்டேன்.. தப்புதாண்ணே” என்று சொன்னார்.
இதற்கு பதிலளித்த கமல் “காயத்ரி சொன்னது போல் நீ அவர்களை நிறை குறை சார்ந்த பெரியவர்களாக பார்க்கிறாய். சாதாரணமாக குடும்பத்தில் ஒருவராக நினைத்து பழகினால் சந்தோசமாக இருக்கலாம்” என்று அறவுரை கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.