
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் கமல்ஹாசன் ரீ என்ட்ரி கொடுத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவருடைய குறைகளையும் சொல்லி எல்லோருக்கும் அறிவுரை கூறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் இருப்பவர்களை மட்டுமே காட்டி வந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ரசிகர்களுடன் கமல்ஹாசன் மேடையில் இருக்கும் அகன்ற திரையில் பிக் பாஸ் வீட்டிற்குள் தங்கியிருக்கும் மற்றவர்கள் காட்சியளித்தனர்.
ஒவ்வொருவராக யாரை மிஸ் பண்ணுகிறீர்கள் என்று கமல் கேட்க தங்கள் வீட்டில் உள்ள உறவினர்கள் மனைவி பிள்ளைகளை மிஸ் பண்ணுவதாக தெரிவித்தனர்.அதில் சிலரை கிண்டலடித்தார்.
நடிகை ஓவியா நான் யாரையும் மிஸ் பண்ணுவதாக நினைக்க வில்லை என்று கூறினார்.
நமீதா “என்னுடைய சாக்லேட் குழந்தையை மிஸ் பண்ணுகிறேன். நான் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அன்று தான் என்னுடைய குழந்தைக்கு அடிபட்டது .என் சாக்லேட் குழந்தை அவன் அப்பா அம்மாவை மிஸ் செய்கிறேன்” என்று கூறினார். குறுக்கிட்ட கமல் இவர் குழந்தை என்று சொல்வதெல்லாம் இவர் வளர்ப்பு நாயை.. யாரும் எதுவும் நினைக்க வேண்டாம் என்று கிண்டலடித்தார்.
ஜூலியிடம் யாரை மிஸ் பண்ணுகிறாய் என்று கேட்டதற்கு “நிறைய மிஸ் பண்ணுகிறேன்” என்று கூறினார் அதற்கு கமல் கேமராவையுமா? என்று கேட்டு கிண்டலடித்தார்.
வையாபுரியிடம் “என்ன வையாபுரி? ஷூட்டிங்காக மாதகணக்கில் சென்றதில்லையா? நீங்களே இப்படி அழலாமா? நான் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்” என்று கூறினார் .
பின்னர் ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சனைகளை பற்றி பேசினார் அப்போது கஞ்சா கருப்புவிடம்” என்ன கஞ்சா கருப்பு? நெறைய கோவப்படுறீங்களே? இதைதான் நா என் படத்துல குறிப்பிட்டுருப்பேன். நம்மாளுங்க எடுத்தவுடனே கோவப்படுவது, அடிப்பது, இல்லாவிட்டால் அருகில் இருக்கும் அரிவாள் எடுத்து வெட்டுவது.. உங்க உடம்புக்கு இதெல்லாம் தேவையா?” என்று கேட்டார். “இல்லண்ணே வீட்ல நிம்மதி இல்லன்னு இங்க வந்தா இங்கயும் நிம்மதி இல்லை” என்று சொன்னார்.
“நிம்மதி வெளியேயும் இருக்கு.. இங்கயும் இருக்கு.. அது நமக்குள்ளயேதான் இருக்கு..” என்று புத்தி சொன்னார்.
பின்னர் ஒவ்வொரு விசயமும் பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட விஷயங்கள் நடிகர்கள் என்பதை மறந்து சாதாரணமாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டத்தான இந்த பிக் பாஸ்” என்று கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.