லைட் மேன்னையும் மதிக்கும் கமல், அஜித்.... சிலிர்க்க வைத்த உண்மை...!!!

Asianet News Tamil  
Published : Feb 10, 2017, 06:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
லைட் மேன்னையும் மதிக்கும் கமல், அஜித்.... சிலிர்க்க வைத்த உண்மை...!!!

சுருக்கம்

சினிமா என்றாலே முதலில் நம்  கண் முன்னே பிரதிபலிக்கும் கதநாகயன் கதாநாயகிக்குதான் நாம் முதலிடம் கொடுத்து வருகிறோம். அடுத்த படியாக தான் இயக்குனர், இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர்  என பலர் ஞாபகம் வருகிறது.

ஆனால் இவர்களையும் தாண்டி, வேலை பார்க்கும்  லைட் மேன், மேக்கப், செட் டிசைனர், காஸ்டியும், டப்பிங் என பல பிரிவுகள் உள்ளதை பெரும்பாலும் யாருமே கண்டு கொள்வதில்லை.

அதிலும் இரண்டு படங்கள் ஹிட் கொடுத்துவிட்டால் பலர் நாம் தான் முன்னணி ஹீரோ, ஹீரோயின் என்கிற நினைப்பில் பலருக்கு மரியாதையை கூட கொடுப்பதில்லை என்பது சினிமா வட்டாரத்தில் பரவலாக கூறப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில்  வெங்கடேஷ் குமார் என்பவர் லைட்மேன் குறித்து ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்து வருகிறார்.

அதில்  ஒரு லைட்மேன் கூறுகையில் ‘எங்களை மிகவும் மதிப்பது, கமல், அஜித், பிரபு, நெப்போலியன் ஆகியோர் தான்.

அனைத்து ஹீரோக்களும் எங்களுடன் நன்றாக தான் பேசுவார்கள் , ஆனால், குறிப்பிட்டு ஒருவரை சொல்கிறேன் என்றார் அவர்கள் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல்.

கமல் சார் எப்போதும் எங்களிடம் “நானும் உங்களை போல் ஒரு டெக்னிஷியன் தான், எனக்கு வணக்கம் சொல்ல வேண்டாம்” என்பார். அதேபோல் நடிகர்  அஜித் எங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார்’ என அந்த லைட்மேன் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிவாஜி கணேசனையே அழ வைத்த கண்ணதாசன் பாடல்.! ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணீர் விட்டு கதறிய நடிகர் திலகம்.!
தங்கமயிலால் கணவரை பிரியும் மீனா... கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்