
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர், நடிகைகள் இன்று நடனத்தில் ஜொலிப்பதற்கு கலா மாஸ்டர் தான் காரணம்.
முன்னணி நடிகர்களான விஜய் , அஜித் முதல் பலரும் இவரிடம் நடனம் கற்றவர்கள். நடனத்திற்காக இந்தியா அளவில் பல விருதுகளை அள்ளிய பெருமை கலா மாஸ்டருக்கு உண்டு.
இந்நிலையில் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வருகை தந்த கலா மாஸ்டர் தன்னுடைய திரை பயணத்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் நடிகர் அஜித் பற்றி பேசுகையில் அஜித் ஒரு சிறந்த மனிதர் என்றும் , அவர் தன்னிடம் நடனம் பயின்ற காலத்தில் தினமும் தனது வீட்டிற்கு வந்து காலில் விழுந்து நமஸ்காரம் செய்து நடனம் கற்றார் என்றும்.
அவரை வெளியே அடிக்கடி பார்க்க முடியாது. ஆனால் அவர் மனசு மிகவும் சுத்தமானது, உண்மையில் அஜித்தை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.