'காலா' படத்தின் அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையையும் பெற்ற பிரபல நிறுவனம்..!

First Published Apr 26, 2018, 5:04 PM IST
Highlights
kala movie satalite power gets starnetwork


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்து முடித்துள்ள திரைப்படம் 'காலா'. இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே படக்ழுவினர் அதிகார பூர்வ தகவலை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விரைவில் தொடங்க உள்ளதாகவும், படத்தின் ட்ரைலர் ரீலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் சற்று முன் 'காலா' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், தன்னுடைய சமூக வலைத்தலத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 'காலா' படத்தின் அனைத்து மொழிகளுக்கும் அதிகாரபூர்வமான சாட்டிலைட் பார்ட்னர் ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் என்று அறிவித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேங்கை மகனாக நடித்து வரும் இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக நடிகை ஈஸ்வரிராவ் நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகை ஹூமாகுரோஷி முக்கிய கதாப்பதிரத்தில் நடித்துள்ளார். நானா படேகர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!