’டி.டி.வி. தினகரன் என்னை வாங்க மாஸ்டர்ன்னு கூப்பிட்டதும் புல்லரிச்சிப்போச்சு’...அ.ம.ம.க.வில் ஐக்கியமான ‘கிழி கிழி கிழி’கலா...

Published : Mar 23, 2019, 09:37 AM IST
’டி.டி.வி. தினகரன் என்னை வாங்க மாஸ்டர்ன்னு கூப்பிட்டதும் புல்லரிச்சிப்போச்சு’...அ.ம.ம.க.வில் ஐக்கியமான ‘கிழி கிழி கிழி’கலா...

சுருக்கம்

நானும் கொஞ்ச நாள்களாக அவரின் பேட்டிகள், மற்றவரை அணுகும் முறை எனப் பல விஷயங்களை நோட் பண்ணிட்டு இருக்கேன். நான் பொதுவாகவே தெய்வ பக்தி உள்ள ஆள். விநாயகர் என் ஆஸ்தான கடவுள். ஏதோ ஒரு விஷயம் பிடிக்கப் போய்தான் இன்று அ.ம.மு.க -வில் இணைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். 


கலைஞர் டிவி டான்ஸ் ஷோக்களில், குறிப்பாக ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ் பெற்ற டான்ஸ் மாஸ்டர் கலா தன்னை டிடிவி தினகரன் முன்னிலையில் அ.ம.ம.க.வில் இணைத்துக்கொண்டார். தனது 12 வது வயதில் புன்னகை மன்னன் படத்தில் நடன உதவியாளராக அறிமுகமான கலா, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் சேர்த்து இதுவரை 4000 பாடல்களுக்கும் மேல் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியிலும் புது உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று தினகரனின் அ.ம.மு.க -வில் இன்று இணைந்துள்ளார் கலா மாஸ்டர். கலைஞர் டி.வியில் `ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியின் இயக்குநரான கலா இப்போதுதான் முதன் முதலாக ஒரு கட்சியில் இணைந்துள்ளார். 

இதுகுறித்துப் பேசிய அவர்,’’ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என்னைச் சுற்றி இருக்கும் நிறைய நண்பர்கள் தினகரன் குறித்து நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். நானும் கொஞ்ச நாள்களாக அவரின் பேட்டிகள், மற்றவரை அணுகும் முறை எனப் பல விஷயங்களை நோட் பண்ணிட்டு இருக்கேன். 

நான் பொதுவாகவே தெய்வ பக்தி உள்ள ஆள். விநாயகர் என் ஆஸ்தான கடவுள். ஏதோ ஒரு விஷயம் பிடிக்கப் போய்தான் இன்று அ.ம.மு.க -வில் இணைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். 

அவரைச் சந்தித்த பதற்றம் இப்போது வரை அப்படியே இருக்கிறது.

அவரைச் சந்தித்தவுடன், `வாங்க மாஸ்டர்..!' என்றார். எனக்கு அவர் அப்படிக் கூப்பிட்டது மிகவும் பிடித்திருந்தது. புல்லரிச்சுப்போயிடுச்சு. ஏனென்றால், எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலான தலைவர்கள் அவர்களுடைய பெயரை மட்டுமே அழைப்பார்கள். அவர்கள் சார்ந்த துறையையோ, தகுதியை வைத்து அழைப்பது கிடையாது. ஆனால், என்னை மாஸ்டர் என்று அழைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை ஒரு டான்ஸ் ஷோவுக்கு காஸ்டியூம் செலக்ட் செய்வதாக இருந்தாலும் சரி, எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் என்னுடைய அர்ப்பணிப்பு கண்டிப்பாக இருக்கும். அதேபோலத்தான், இந்தக் கட்சியின் உறுப்பினராக இணைந்திருக்கும் நான் நல்ல அர்ப்பணிப்புடன் கட்சிப் பணியாற்றுவேன்’ என்கிறார் கலா. 

கலைஞர் டி.வியில டான்ஸ் ஆடுனவங்கள கிழி கிழின்னு கிழிச்ச நீங்க இனி கலைஞர் டி.வி ஓனருங்களையே கிழிக்கப்போறீங்க.அப்படித்தானே மாஸ்டர்?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!