டி.டி.வி.தினகரன் கட்சியில் இணைந்து அதிரடி காட்டிய டான்ஸ் மாஸ்டர் !! உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்யப் போகிறாராம் !!

Published : Mar 22, 2019, 11:08 PM IST
டி.டி.வி.தினகரன் கட்சியில் இணைந்து அதிரடி காட்டிய டான்ஸ் மாஸ்டர் !! உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்யப் போகிறாராம் !!

சுருக்கம்

பிரபல மான்ஸ் மாஸ்டர் கலா அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.  

அண்மைக்காலமாக அமமுக கட்சியில் திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், அமமுகவில் இணைந்தார். இதே போல் பாடகர் மனோ கடந்த  வாரம் தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார்
இந்நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியில் டான்ஸ் மாஸ்டர் கலா இணைந்துள்ளார். 

பாராளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அமமுக அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ளது. அத்தோடு இன்று தினகரன் அமமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் விவசாயிகள் நலன், வேலைவாய்ப்பு, மாணவர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் அந்த கூட்டத்துக்கு வந்த  டான்ஸ் மாஸ்டர் கலா, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார். 


தினகரனை சந்தித்து தனது ஆதரவை அவர் தெரிவித்தார். தினகரனின் கொள்கைகள், அவரின் பேச்சு, மக்கள் மீது கொண்ட நலன் ஆகிய காரணங்களால் ஈர்க்கப்பட்டு அமமுகவில் இணைந்ததாகவும், கட்சி மேலிடம் என்ன வேலை கொடுத்தாலும் உயிரை கொடுத்து வேலை செய்வேன் என அவர் கூறினார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
தங்கமயிலின் அதிரடி முடிவு! - அம்மாவை நம்பினால் வேலைக்காது வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா; நீதி கிடைக்குமா?