"அஜித் இவ்வளவு பெரிய ஸ்டார் என்று இப்போது தான் தெரிகிறது"- ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின்!!!

 
Published : Aug 05, 2017, 03:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
"அஜித் இவ்வளவு பெரிய ஸ்டார் என்று இப்போது தான் தெரிகிறது"- ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின்!!!

சுருக்கம்

kajin open talk about ajith

சர்வதேச தரம் வாய்ந்த உளவு சார்ந்த படங்களில் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மிகவும் அவசியமானவை. அதற்கேற்ற திறமையும், உடல் மற்றும் மன பலம் உள்ள நடிகர்களால் மட்டுமே இவ்வாறான படங்களில் நடிக்க முடியும். 

இந்திய சினிமாவின் முதல் சர்வதேச உளவாளி படமான 'விவேகம்' படத்தில் அஜித் குமாருடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை சிவா இயக்க , 'சத்ய ஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ளது.

ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் 'விவேகம்' ரிலீஸாகவுள்ளது. 'Casino Royale', '300: Rise Of An Empire', 'The Transporter Refunded' போன்ற மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின்  ' விவேகம்' படத்தில் கதாநாயகன் அஜித்தின் அணியான ஐவரில் ஒருத்தராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இது குறித்து சர்ஜ் க்ரோசோன் பேசுகையில், '''விவேகம் ' போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த கதாபாத்திரத்திற்கான இண்டர்வீயூவில் கலந்து கொண்ட பிறகே இயக்குனர் சிவா எனக்கு இந்த வாய்ப்பளித்தார்.

சிவாவின் காட்சிப்படுத்தல் முறையையும், படத்திற்கு என்ன வேண்டும் என்ற அவரின்  தெளிவும் என்னை ஈர்த்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாகும். 'விவேகம்' படத்தில் எனது காட்சிகளை முடித்த பின் வீடு திரும்பி போதுதான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும் அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதை தெரிந்துக்கொண்டேன். 

படப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டை காட்சி  சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவ்வளவு கடின உழைப்பாளி அவர் . படப்பிடிப்பு இடைவெளிகளில் அவருடன் நடந்த உரையாடல்களை எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும் . அருமையாக படமாக்கப்பட்டுள்ள 'விவேகம்' படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாக கூறுவேன்" எனக் கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!