
ஓவியாவை காதலிப்பது போல் சில நாட்கள் ஓவியாவிடம் பழகி வந்த ஆரவ் கடந்த இரண்டு நாட்களாக ஓவியாவை முற்றிலுமாக ஒதுக்கி வருகிறார். இந்த ஏமாற்றத்தை தாங்க முடிய ஓவியா, ஆரவை மறக்க முடியாமல் தவித்து வருகிறார்.
ஒரு நிலையில் திடீர் என எழுந்து போய் ஆரவிடம் என்னை முட்டாள் என்று நினைக்கிறாயா? நீ ஒரு ப்ளேபாய் என ஆரவை திட்டி விட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தார்.
ஓவியா வரும் போது எதிரே அமர்ந்திருக்கும் ஜூலியை பார்த்ததும் "நீ ரொம்ப நடிக்காதே... உனக்கு இருக்கு.. எப்படி உன்னால ஒரு மாதம் முழுவதும் நடிக்க முடிகிறது. நீ எல்லாம் ஒரு மனுஷனா... வாய் எடுத்தா பொய்... சாத்தியமா சொல்லு எதாவது ஒரு நல்ல வார்த்தை நீ சொல்லி இருக்கியா? எப்ப பார்த்தாலும் அங்க இருக்குறத இங்க சொல்லி கிட்டு, இங்க நடக்குறதை மாத்தி சொல்லிக்கிட்டு என திட்டிவிட்டு நீ மட்டும் ஏன் கையில கிடைச்ச... என மிகவும் கோபமாக பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஆனால் ஜூலியை ஓவியா இவ்வளவு திட்டியும் யாரும் ஒரு வார்த்தை கூட ஓவியாவை கேட்காமல் அமைதியாகத்தான் இருந்தார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.