பிரக்னன்சி பெல்லியுடன்..ஒர்கவுட் செய்யும் காஜல்...என்ன சொல்லிருக்காங்க பாருங்க...

By Kanmani PFirst Published Feb 28, 2022, 5:19 PM IST
Highlights

கர்ப்பிணியாக இருக்கும் காஜல் அகர்வால்...ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்...

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தவர். 30 வயதை கடந்த நடிகையாக இருந்தாலும், இவரின் அழகு மற்றும் கவர்ச்சி காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை இவர் கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு, அக்டோபர் மாதம், பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கமிட்டான சில படங்களில் நடித்துவந்த காஜல் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.

கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிக்காமல் இருந்து வரும் காஜல், வழக்கம்போல் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.மேலும், குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் சத்தமில்லாமல் இவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுள்ளது...இது தொடர்பான போட்டோக்கள் காஜல் அகர்வால் பகிர்ந்திருந்தார்..இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..இந்நிலையில் காஜல் அகர்வால் பிரக்னன்சி கால உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்..இந்த வீடியோவுடன்..

"நான் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பான நபராக இருந்தேன், என் வாழ்நாள் முழுவதும் வேலை செய்தேன். கர்ப்பம் ஒரு வித்தியாசமான பந்து விளையாட்டு! சிக்கல்கள் இல்லாமல் கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களும் தங்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக ஏரோபிக் மற்றும் ஸ்ட்ரென்ட் கண்டிஷனிங் பயிற்சிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் - Pilates மற்றும் barre என் கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் சிறந்த மாற்றத்திற்கு உதவும். இந்த மாற்றும் அணுகுமுறை என்னை வலுவாகவும், நீளமாகவும், மெலிந்ததாகவும் உணர்கிறேன். கர்ப்ப காலத்தில் ஏரோபிக் கண்டிஷனிங்கின் குறிக்கோள், உச்சகட்ட உடற்தகுதியை அடைய முயற்சிக்காமல் முழுவதும் நல்ல உடற்தகுதி அளவை பராமரிப்பதாகும்". என குறிப்பிட்டுள்ளார்..

 

 

click me!