அஜித் பரோட்டா மாஸ்டர்..ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டால் ..கொந்தளிக்கும் ரசிகர்கள்..

Kanmani P   | Asianet News
Published : Feb 28, 2022, 02:59 PM IST
அஜித் பரோட்டா மாஸ்டர்..ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டால் ..கொந்தளிக்கும் ரசிகர்கள்..

சுருக்கம்

வலிமை படத்தில் அஜித் நடனத்தை பார்த்து சிரிக்காதவர்கள் உண்டா என ப்ளூ சட்டை மாறன்...பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது... 

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது.மூன்று நாளில் சுமார் ரூ. 100 கோடி வசூல் செய்து அஜித்தின் வலிமை படம் சாதனை படைத்துள்ளது. இதனை நடிகை, ஹூமா குரேஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் . அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்  பிப்ரவரி 24 அன்று உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியானது.

இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் தமிழ்நாடு வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.  முதல் நாளிலேயே மார் ரூ. 36 கோடி வசூல் செய்து மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தை மோசமாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் ஏற்கனவே அஜீத் ரசிகர்கள் வசை பாடி வரும் நிலையில் இவர் சமீபத்தில் டுவிட்டரில் அஜித் நாங்க வேற மாதிரி பாடலுக்கு நடனமாடும் புகைப்படத்தை வெளியிட்டு பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த காட்சியை பார்த்து தியேட்டரில் சிரிக்காதவர்கள் உண்டா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவருடைய இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை கீர்த்தி பாண்டியன் ஒரு நடிகரை தரக்குறைவாக இப்படி விமர்சனம் செய்து பதிவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஒரு படத்தைப் பார்த்து விட்டு அந்த படத்திற்கான வசனத்தை சொல்வதில் உங்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால் ஒருவரை கேலி செய்வது உரிமையில்லை என கூறியுள்ளார்.

 

அதே  போல தயாரிப்பாளரான ஃபோப்டா தனஞ்செழியன் அவர்கள் இந்த பதிவை பார்த்து நான் மிகவும் வருந்துகிறேன். ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ் டாக்கீஸ் இதை மாற்றி கொண்டு நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்