பிரிய காரணம் "லவ் டார்ச்சர்"...சாண்டி பற்றி மனம் திறந்த பிக் பாஸ் காஜல்!

 
Published : Sep 22, 2017, 06:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
பிரிய காரணம் "லவ் டார்ச்சர்"...சாண்டி பற்றி மனம் திறந்த பிக் பாஸ் காஜல்!

சுருக்கம்

Kajal open talk husband sandy

தொகுப்பாளராக அறிமுகமாகி, வசூல் ராஜா MBBS , மற்றும் ஒரு சில தமிழ் படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளவர் நடிகை காஜல். கடந்த சில நாட்களாக திரையுலகை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் ஆயிரத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியின் போது... ஆனலைன் ஊடகம் ஒன்றிற்கு இவருடைய காதல், திருமணம் மற்றும் கணவரின் திருமணம் பற்றி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்... காதல் என்பது திருமணத்தில் முடிந்து விடும், திருமணம் என்பது விவாகரத்தில் முடிந்துவிடும் என கூறியுள்ளார். 

விவாகரத்திற்கு பின் மறுமணம் செய்து  கொள்வது அவர்களுடைய விருப்பம் என்றும் ஆண்கள் 10 திருமணம் செய்துகொள்ளும் போது பெண்கள் ஏன் செய்யக்கூடாது என்றும் மிகவும் தைரியமாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து இவருடைய முன்னாள் கணவர் சாண்டி மறுமணம் செய்துகொண்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு... மிகவும் சாதாரணமாக ஆமாம் நானும் கேள்விப் பட்டேன். எனக்கும் வாட்ஸ்ஆப்பில் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் போக முடிய வில்லை என்பது போல் தெரிவித்தார்.

ஆனால் நான் பிக் பாஸ் வீட்டில் உள்ளே இருந்த போது "இப்போது திருமணம் நடைபெற்றிருக்கும்" "முதல் இரவு நடைபெற்றிருக்கும்' என்பதை நினைத்துக் கொண்டு தான் இருந்தேன் ஆனால் அவர் மிகவும் இனிமையான மனிதர் என முன்னாள் கணவரை விட்டுக் கொடுக்காமல் பேசினார் காஜல்.

இந்த திருமணம் உங்களுக்கு எந்த அளவிற்கு வலியை தூண்டியது என பத்திரிகையாளர் கேட்டதற்கு "தற்போது அவர் திருமணம் செய்துகொண்டது  எனக்கு கஷ்டமாக இல்லை' ஆனால் அவர் என்னை கழட்டி விட்ட நேரத்தில் அது அதிமான வலியைக் கொடுத்தது என்று கூறினார்.

மேலும் 2008ல் தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் இரண்டு மூன்று வருடங்களிலேயே  எங்களுக்குள் அனைத்தும் முடிந்து விட்டது. சாண்டி என்னை விட்டு பிரிவதற்கு காரணம் நானும் "புது புது அர்த்தங்கள் படத்தில் வரும் கீதாவை போல் பொசசிவ் அதிகம். லவ் டார்ச்சர் செய்திருக்கிறேன் என்பதை அனுபவித்தால் தான் தெரியும் என கூறி தன் மேல் உள்ள தவறையும் தயங்காமல் ஒப்புக்கொண்டார்.

அதே போல் சாண்டியும் இது லவ் டார்ச்சர் என்று அனுசரித்து போய் இருக்கலாம்... ஆனால் இதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்றார் வெகுளித்தனமாக. ஊடகங்களில் பலர் சாண்டி எனக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்து விட்டு துரோகம் செய்து விட்டு மற்றொரு திருமணம் செய்துக்கொண்டார் என்று பச்சை பச்சையாக திட்டுகின்றனர்... என்னதான் இருந்தாலும் என்னுடைய முன்னாள் கணவரை திட்டுவது எனக்கு வேதனையாக உள்ளது என்று காஜல் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!