
அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் இரண்டாவது முறையாக நடித்து வரும் மெர்சல் திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு மொத்தம் 92 நாடுகளில் சமூக வலைதளத்தின் மூலம் வெளியிடப்பட்டது.
ஏற்கெனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'மெர்சல்' படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில். தற்போது டீசர் அதையும் தாண்டி ரசிகர்கள் மத்தியில் சாதனை படைத்தது வருகிறது.
டீசர் வெளியாகிய 30 நிமிடத்திற்குள் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து அதிகமான லைக்குகளை பெற்ற டீசர் என்கிற சாதனையை 'மெர்சல்' திரைப்படம் படைத்துள்ள நிலையில், தற்போது டீசர் வெளியாகிய 24 மணிநேரத்தில் 1 கோடிக்கும் அதிமான ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் இது வரை எந்த ஒரு டீஸருக்கும் கிடைக்காத வரவேற்பு இது என்றும் கூறப்படுகிறது.
டீசரைப் பார்த்து விஜய் ரசிகர்கள் பலர் எப்போது படம் வெளியாகும் என்கிற ஆவலை டீசர் தூண்டியுள்ளது என தெரிவித்து வருகின்றனர். அதே போல் பல பிரபலங்களும் 'மெர்சல்' டீசருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.