`நியூட்டன்' இந்தி திரைப்படம் ஆஸ்கர் பட விழாவுக்கு தேர்வு!

 
Published : Sep 22, 2017, 06:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
`நியூட்டன்' இந்தி திரைப்படம் ஆஸ்கர் பட விழாவுக்கு தேர்வு!

சுருக்கம்

NEWTON is India official entry to the OSCARS this year

அரசியல் நையாண்டி திரைப்படமான ‘நியூட்டன்’ (இந்தி), 2018 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான படவிழாவில், இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை அமித் மசூர்கர் இயக்கியுள்ளார். இவருக்கு இது இரண்டாவது படமாகும். இப்படத்தில் ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். அமித் மசூர்கர் கடந்த 2014 ஆம் ஆண்டில் ‘சுலேமானி கீடா’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் 2018 ஆஸ்கர் பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது எனும் தகவலை தெலுங்குப்பட தயாரிப்பாளரும், தேர்வுக் குழு உறுப்பினருமான சி.வி. ரெட்டி தெரிவித்தார். இது பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தேர்வுக் குழுவின் ஒருமித்த தேர்வாகும் என்று அவர் கூறினார்.

இவ்வாண்டு தேர்வில் கலந்து கொண்ட 26 படங்களில் ‘நியூட்டன்’ அதிகாரபூர்வமாக ஆஸ்கரில் பங்கு கொள்ளும் என்று அந்த அமைப்பின் பொதுச் செயலர் சுரான் சென் கூறினார்.

இது பற்றி நடிகர் ராஜ்குமார் ராவ் கூறுகையில் இத்தேர்வு தனக்கு பெருமிதம் அளிப்பதாக உள்ளது என்றார். ”உண்மையிலேயே இது நேர்மையான படம்; இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எங்களுடைய முழு சக்தியையும் இப்படத்தை முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்துவோம்” என்றார் ராஜ்குமார் ராவ்.

”இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகிறது. அதே சமயத்தில் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது” என்றார் இயக்குநர் மசூர்கர்.

படமானது நக்சலைட் மோதல் மிகுந்த சத்திஸ்கர் பகுதியில் நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முயலும் நேர்மையான தேர்தல் அதிகாரியின் நிலைமையை அரசியல் நையாண்டியோடு விவரிக்கிறது. இப்படத்தில் பிரபல நடிகர்களான பங்கஜ் திரிபாதி, ரகுபீர் யாதவ், அஞ்சலி பாட்டீல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆஸ்கர் பட விழாவில், இந்தியா சார்பில் இயக்குநர் வெற்றிமாறனின் `விசாரணை' தமிழ்ப் படம் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!